Wednesday, 30 September 2015



மல்லசந்திரம் கற்திட்டைகள்
இது தமிழர்களின் பிரமிடுகள்

உலக அதிசயம் உள்ளுரில்தான் இருக்கிறது.ஆனால் யாருக்கும் தெரியாமல் அழிவின் விளிம்பில்.கிருஷ்ண்கிரி மாவட்டம் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய
நெடுஞ்சாலையில் பயனித்து சாம்பல்பள்ளம் எனும் இடத்தில் இடதுபுரம் திரும்பி
மூன்று கி.மீ. துரத்தில் நடந்தால் மல்லசந்திரம் வருகிறது. இங்கு இரட்டை மலைமீது மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையர்களின் ஈம்சின்னம்
அதாவது கற்திட்டைகள் (Dolman) 250 க்கும் மேற்பட்டவை அழிவின் விளிம்பில் உள்ளன
கற்காலத்தை மூன்றாக பிரிக்கலாம். பழங்காலகற்காலம், புதியகற்காலம்
பெருங்கற்காலம்(Megalithic Dolman), இதற்க்கு அடுத்துவருவதுதான் இரும்புகாலம். இதில் மல்லசந்திரம் கற்திட்டைகள் பெருங்கற்காலத்தை சேர்ந்ததாகும்.தென் இந்தியாவில்தான் அதிகமான கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்படுள்ளன. அதுவும்
தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா. மூன்று மாநிலத்தில் தமிழ்நாட்டில்தான் அதிகமான கற்திட்டைகள் உள்ளன.
கற்திட்டைகளில் பலவகை உள்ளன. கற்திட்டைகள் (Dolman) , கற்பதுக்கைகள்(CistDolman), குத்துக்கல் (Menhir), பரல் உயர்பதுக்கைகள்(Caim circko),
வட்ட புதிர்கல், இப்படிபலவகையான கற்திட்டைகள் ஈமசின்னங்கள் கிருஷ்ண்கிரி மாவட்டம் முழுவதும்ஏராளமாக உள்ளன.
இதே மாதிரி கற்திட்டைகள் (Dolman) வேறுஇடங்களிலும் உள்ளன
கிருஷ்ணகிரி அருகில் மகாராஜகடை என்ற இடத்தில் -17 கற்திட்டைகள் உள்ளன.
குப்பம் அருகில் உர்மனகுண்டா என்ற இடத்தில் -60 கற்திட்டைகள் உள்ளன.
கிருஷ்ணகிரி அருகில் வேலம்பட்டி அருகில் வெப்பாலம்பட்டியில் -3 கற்திட்டைகள் உள்ளன.
திருவண்ணாமலை ம.வ ஜவ்வாது மலையில்-40 கற்திட்டைகள் உள்ளன
கர்நாடக மாநிலத்தில் Hirrvenekal வில்-120 கற்திட்டைகள் உள்ளன
கர்நாடக மாநில அரசு இதை உலக சின்னமாக அறிவிக்க முயற்ச்சி
செய்துகொண்டுள்ளனர். ஆனால் அதைவிட அதிக எண்ணிக்கையுள்ள
நாம் மாநில அரசு இதுவரை எந்த முயற்ச்சியும் எடுத்ததாக தெரியவில்லை
மல்லசந்திரம் கற்திட்டைகள் (Dolman)
இங்கு கானப்படும் கற்திட்டைகள் உலகில் வேறு எங்கும் இல்லாதஅளவு மிக பெரியாதாக
உள்ளன. 2 அடி தடிமன் , 15 அடியிலிருந்து 20 அடி வரை நீள அகலம். இவ்வளவு பெரிய
கற்பாறைகளை 10 அடி உயரத்தில் தூக்கி நிருத்தியுள்ளனர். இதன் அமைப்பு ஐந்து கற்பாறைகளை கொண்ட மூடிய அறைபோல்
இருக்கும். கிழக்குநோக்கியிருக்கும் கற்பாறையில் வட்டவடிவமாக
ஒரு துவாரம் இருக்கும். இந்த துவாரத்தின் வழியாக இறந்தவரின்
ஆவி வந்துபோவதாக நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.
இந்த கற்திட்டைகள் உட்பகுதியில் இறந்து போனவர்களின்
எச்சங்கள் ,அவர்கல் பயன்படுத்திய திடபடிமங்கள்
உணவு பொருட்கள், வைக்கபட்டிருக்கவேண்டும்.மேலும் உட்பகுதியில் நிறைய பாறை ஓவிங்கள் வரையபட்டுள்ளன. இந்த ஓவிங்களில் வேட்டைகாச்சிகள், விலங்குகளுடன்
போரிட்டு வென்றபிறகு கொம்பு ஊதி அழைத்து செல்லும் காட்ச்சிகள். யானை, மீன் குதிரை, போன்றவையும் வறையப்பட்டுள்ளன.
எல்லா கற்திட்டைகலும் கிழக்குநோக்கியே அமைக்கப்பட்டுள்ளன
எல்லாமே மிக சரியாக 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளன .இதை Srikumar M. Menon அவர்கள் தனது
GPRS கருவியை பயன்படுத்தி உறுதிபடுத்தினார்

மல்லசந்திரம் கற்திட்டைகள் (Dolman) பாறை ஓவிங்கள்
புதையல் எடுப்பதற்க்காக குழிநோண்டி கற்திட்டைகளை செதபடுத்திவிட்டு
அப்படியே விட்டுசென்றுள்ளனர்.அங்கு உடைந்த சில பானை ஓடுகள் கிடைத்தன. அந்தமண் கருநிறம்கலந்த செம்மண்ணாக இருந்து. இந்த
மண்னை ஆய்வு செய்தால் நிறைய உன்மைகள் வெளிவரும்.
மேலும் இரு இடுதுளை கொண்ட கற்திட்டை ஒன்று உள்ளது . இதுமாதிரி
வேறு எந்த இடத்திலும் இரு இடுதுளை கொண்ட கற்திட்டை இல்லை.
இது நமக்குகிடைத்த மிகப்பெறிய வரலாற்று பொக்கிஷம்.
இரு இடுதுளை கொண்ட கற்திட்டை

3000 ஆயிரம் ஆண்டு பழமையான பானை ஓடுகல்
3000 ஆயிரம் பழமையான , உலகஅதிசயங்களில் ஒன்றா இருக்கவேண்டிய இந்த
ஈமசின்னங்களை காப்பாற்றுவதற்க்கு யாரும் இல்லையே என்ற வேதனை இதை
பார்க்கும் , படிக்கும் எல்லோருக்கும் ஏற்படும். ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க
பல ஆயிரம் வருடங்கள் பழமையான இருக்கும் காடுகளும் மலைகளும், நமது
முன்னோர்கள் நமக்காகவிட்டு சென்ற வரலாற்று சின்னங்களை கிரானைட் வியபாரிகள்
அழித்துகொண்டிருக்கிறார்கள். இதை அரசும் கண்டுகொள்வதில்லை, அதை செய்ய வேண்டிய தொல்லியல் துறையும் கண்டுகொள்வதில்லை . நமது கண்னேதிரிலேயே
நமது வரலாற்று சின்னங்களும் பண்பாட்டு வழி தடயங்களும் அழித்துகொண்டிருக்கின்றன
- அறம் கிருஷ்ணன்







No comments:

Post a Comment