Wednesday, 30 September 2015

அத்திமுகம்- அழிவின் விளிம்பில் ஒரு சோழர் கால கோயில்



அழிவின் விளிம்பில் ஒரு சோழர் கால கோயில்
இடம் -அத்திமுகம் -1
சிவன் கோயில் பெயர்-ஸ்ரீ காமாட்சியம்மன் சமேத
ஸ்ரீஐராவதேஸ்வரர் சுயம்பு லிங்கம்
அழகிய சோழிஸ்வரர்.
இரண்டு மூலவர்களை கொண்டது இக்கோயில்
அத்திமுகம் ஓர்
அறிமுகம்.
ஓசூரிலிருந்து 22 கி.மீ. பயணம் செய்தால் அத்திமுகம் வந்து விடுகிறது. ஹஸ்தி முகம் என்றும் அழைக்கலாம்.
ஹஸ்தி என்றால் -யாணை என்று பெயர்.
மிக பழமையான ஆயிரம்மாண்டுகளுக்கு முற்பட்ட கோயில், பூமியிலிருந்து பத்தடிக்கும் கீழ் உள்ளது.கடந்த ஆண்டுதான் ஐந்தடி வரை பல்லம் நோன்டி முழுமையான கோயில் வெளியே தெரியும்படி செய்திருக்கிறார்கள்.
கங்கர்கள், சோழர்கள், ஹாய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் என நான்கு மன்னர்களுமே இந்த கோயிலை மேம்படுத்தியிருக்கிறார்கள்.இதற்காண கல்வெட்டும் இங்கே இருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்.














அத்திமுகம்-2
அழிவின் விளிம்பில் ஒரு சோழர் கால கோயில்
இந்த கோயில் இரண்டு மூலவர்களை கொண்டது
வேறு எந்த கோயிலில்லாவது இதுபோல் உண்டா?
முதலாம்மவர் ஸ்ரீஐராவதேஸ்வரர் -
சுயம்பு லிங்கமாக தோன்றியவர்.
1800 வருடங்களுக்கு மேல்பட்டதாக வாய்வழி செய்தி சொல்லப்படுகிறது.
ஒன்ன்ரையடி உயரம்வரை இருக்கும்.
லிங்கத்தில் யாணையின் முகம் தெறிகிறது.
நந்தி நேர்கோட்டில் இல்லாமல் சற்று விளகியிருக்கிறது
ஒரே சன்னதியில் அம்பாளும் இருக்கிறார்.
அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் இருவரும் இங்குவந்து
வணங்கி சென்றாதாக சொல்லப்படுகிறது.
இது பாடல் பெற்ற ஸ்தலம்.
இங்கு வந்து வணங்கி செல்பவர்களுக்கு தொழில் அபிவிருத்தி
வேலைவாய்ப்பில் உயர்வு இருப்பதாக நம்பப்படுகிறது.










அழகியசோழிஸ்வரர் கோயில்
அத்திமுகம்-3
அழிவின் விளிம்பில் ஒரு சோழர் கால கோயில்
இரண்டாவது மூலவர்.
இந்த மூலவர் முன்புரம் மகா மண்டபம் உள்ளது
மூலவரின் கருவறையை சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது
இதுதான் சோழர்கால கட்டிடகலையின் கைவணணம்
மகா மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு துவாரபாலகர்
சிலை வைக்கப்படுட்ள்ளன.சோழர்களின் ஆரம்பகால கலைவடிவம் .
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளது போல் கருவறையை சுற்றி வர உட்பகுதியிலேயே சந்தாரநாழி எனும் வழி உள்ளது.
இதே மாதிரி சந்தாரநாழி உள்ளகோயில் தஞ்சை பெரியகோயில்
மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்டசோழிஸ்வரர்கோயில் ஆகும்.
கருவறையை சுற்றி மூன்றடி அவுக்கு பல்லம் உள்ளது.
மேலிருந்து காற்று மற்று வெளிச்சம் வருவதற்கு இடைவெளி உள்ளது
அழகியசோழிஸ்வரர் என்ற கல்வெட்டை ஹய்சாள அரசன்
வீரவல்லாளன் செதுக்கியுள்ளான்.








No comments:

Post a Comment