Thursday, 16 June 2016

அழகின் தாகம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எனது முதல் கவிதை புத்தகம்

அழகின் தாகம்
28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எனது முதல் கவிதை புத்தகம் இது.
அழகின் தாகம் என்ற பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பொங்கும்.
பாலகோடு (DDCSM) தொழிற்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது வெளியிடப்பட்டது.
,கல்லூரியின் முதல்வர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் , கல்லூரிக்கு ஒரு நாள் விடு முறை கொடுத்து ஒரு திருவிழாவை போலவே கொண்டாடுவதற்கு அனுமதி கொடுத்தார்.
நேற்று GOOgle இல்அழகின் தாகம் என்ற பெயரை டைப் செய்து சும்மா தேடிப்பார்த்தேன்.என்ன ஆச்சர்யம்
தமிழ் நாட்டின் பல மாவட்ட மைய நூலகங்களில் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிந்தது.
இப்போது இந்த புத்தகம் என்னிடம் ஒன்று கூட இல்லை.ஆனால் எல்லா மாவட்ட மைய நூலகங்களிளும் இருக்கிறது.அப்போதய காலகட்டத்தில் தருமபுரி மாவட்டத்திலிருந்து நூலக தூறைக்கு தமிழ அரசு வாங்கிய முதல் புத்தகம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.
இதை எதற்காக பதிவு செய்கிறேன் என்றால் நாம் வெளியிடுகிற புத்தகங்களை நூலக தூறைக்கு தமிழ அரசு வாங்கும் போதுதான் படைப்பாளனுக்கு ஒருஅங்கிகாரம் கிடைக்கிறது.
அந்த காலகட்டத்தில் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கான தொகை இரண்டாயிரம்தான்.
ஆனால் இந்த இரண்டாயிரம்ரூபாயை சேர்ப்பதற்கு ஐந்நூறு பேரிடமாவது நாங்கள் கையேந்திருப்போம்.
எனது கல்லூரி நண்பர்கள்தான் எல்லாவற்றிக்கும் உதவி செய்தார்கள்.இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பற்றிருக்கிறேன்.
அதனால்தான் நணபர் Ems Kalaivanan ன் ஒரு சவரகாரனின் கவிதை மயிர்கள் என்ற கவிதை புத்தகத்தை ஆயிரம் பிரதிகளை இலவசமாக புதுபித்து கொடுத்தேன்.
ஏனோ தெரியவில்லை எழுத தோன்றியது.பதிவு செய்தேன்.
-அறம் கிருஷ்ணன்








Thursday, 9 June 2016

அறம் இலக்கிய நடத்தும் சந்திப்பு-18

அனைவருக்கும் வணக்கம்
அறம் இலக்கிய நடத்தும் சந்திப்பு-18
நாள்-ஞாயிற்றுக்கிழமை-12.06.16
இடம்-அரசு உயர் நிலைப்பள்ளி. உலகம் சூளகிரி வட்டம்
கவியரங்கம்
கருத்தரங்கம்
படித்ததை பேசலாம்
பிடித்ததை பேசலாம்
வாய்புள்ள அனைவரும் வாருங்கள்
வாருங்கள்
வரலாற்றை வாசிப்போம்
வரலாற்றை நேசிப்போம்
-அறம் கிருஷ்ணன்

Monday, 6 June 2016

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு என்ற முகநூலில் -1000(shares)பகிர்வையும்

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
கடந்த வெள்ளிக்கிழமை (03.06.16)இரவு 7 மணிக்கு என்னுடை முகநூலில் மேட்டூர்" அணையில் மூழ்கிய அறுபது ஊர்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிவு செய்திருந்தேன்.
அந்த பதிவு இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் நான் எதிர்பாற்க்கவில்லை.இன்று காலை (07.06.16) பத்து மணி வரை 86 மணி நேர இடைவெளிக்குல்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு என்ற முகநூலில் -1000(shares)பகிர்வையும்
krishnana.krishnana.என்ற முகநூலில்-55(shares)பகிர்வையும்
அறம் இலக்கிய அமைப்பு Aram Foundation என்ற முகநூலில் -49(shares)பகிர்வையும்
கண்டுள்ளது.இது எப்படி சாத்தியம்.
ஒரு வரலாற்று பதிவை ஆயிரம் முகநூல் நண்பர்கள்
பகிர்ந்துள்ளார்கள் என்பதே பெரிய சாதனைதான்.
அந்த மக்களின் வலியை இதுவரை யாருமே சரியாக பதிவு வில்லையோ என்ற கேள்வி எழுகிறது.
கடந்த நான்கு நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.அணையிலிருந்த வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசிப்பதாகவும் ஒரு நூற்றாண்டாகியும் வலியும் வேதனையும் ,இன்னும் இருபதாக கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்கள்.ன்னோடு தொடர்பு கொண்டு பெசிய அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவிது கொள்கிறேன்.இதனை இன்னும் சரியான நோக்கில் ஆவணப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் என் பயணம் தொடரும்.
-அறம் கிருஷ்ணன்





தருமபுரி மாவட்டத்தில் மூன்று தரை கோட்டைகள்

தரை கோட்டை இது
தருமபுரி மாவட்டத்தில் மூன்று தரை கோட்டைகள் இருந்துள்ளது.
அதியமான் கோட்டை
தென்கரை கோட்டை
தேன்கனி கோட்டை
மூன்று கோட்டைகளுமே அடையாளமே இல்லாமல் அழிந்து போய்விட்டன.
இப்போது நாம் பார்க்கிற மண் கோட்டையானது கெலமங்களத்திலிருந்து இராயக்கோட்டை போகும் சாலையில் ஆணைக்கொல்லு என்ற இடத்தில் இருக்கிறது.
இதற்காண வரலாற்று சான்றுகள்தான் ஏதும் கிடைக்கவில்லை.
-அறம் கிருஷ்ணன்





Saturday, 4 June 2016

மேட்டூர் அணையிலில்உச்சி வெயிலில் களப்பணி ஆய்வு

மேட்டூர் அணையிலில் மூழ்கியிருந்த நந்தி இப்போது வெளியே தெரிகிறது.
உச்சி வெயிலில் களப்பணி ஆய்வு.
-அறம் கிருஷ்ணன்






Friday, 3 June 2016

மேட்டூர். அணையில் மூழ்கிய அறுபது ஊர்கள். இதற்கும் ஆறு என்றுதான் பெயர்.

மேட்டூர்.
அணையில் மூழ்கிய
அறுபது ஊர்கள்.
இதற்கும் ஆறு என்றுதான் பெயர்.
காவேரி ஆற்றின் கரையோர ஊர்களும், அவர்களின் ஆயிரமாண்டு கால நதிக்கரை நாகரிகமும் அழிந்துப்போன கதை இது. .நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிர்ப்புடன் வாசம் செய்த ஆற்றோர குடிசைகள் எல்லாம் அழிந்து போய் 92 வருடங்கள் ஆகிறது. இப்போதிருப்பது அடையாள சின்னங்கள் மட்டுமே.
மேட்டூர் அணையில் சுமார் அறுபது ஊர்கள் வரை மூழ்கியிருக்க வாய்ப்பு
இருபதாக அதன் கரையோரம் வசித்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.இந்த கருத்தை நாம் புரம் தள்ளிவிடமுடியாது.காரணம் ஒகேனக்கல்லிளிருந்து மேட்டூர் அணைவரை சுமார் அறுபது மைல் நீளம் காவேரி ஆற்றின் கரையின் இரண்டு புரமும் சேர்த்து கணக்கிட்டு பார்க்கும் போது இது சரியாகவே படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே ஆற்றங்கரையோரங்களில் மக்கள் வசித்து வந்திருக்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கைமுறையும் அதை சார்ந்தே இருந்திருக்கிறது.மேட்டு நிலங்களில் , கம்பு, வரகு, சாமை, சோளம், ஆரியம், விதைத்து அறுவடை செய்யும் காலம் போக மற்ற காலங்களில் மீன் பிடித்தொழில்தான் பெரிதாக இருந்திருக்க வேண்டும். இப்படி வாழ்ந்த மக்களை திடீர் என்று ஒரு நாள் இந்த இடத்தில் நீர்த்தேக்கம் கட்டுகிறோம். நீங்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விடுங்கள் என்று அதிகாரிகள் சொல்லிய போது அங்குவசித்த மக்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்.இதைப்பற்றி தேடத்துவங்கிய போதுதான் முதலில் அங்கு மூழ்கியிருக்கும் அடையாள சின்னங்கள் பற்றி தெறிந்து கொள்ள புதுசாம்பள்ளியில் வசிக்கும் இரண்டு நண்பர்களை அழைத்து கொண்டு பண்ணவாடி நோக்கி பயணமானோம்.
உச்சந்தலையிலிருக்கும் தலைமுடி தானகவே தீ பிடித்துகொள்ளும் அளவு உச்சியில் கத்திரி வெயில் மண்டையை பிளந்தது.வரலாற்று தேடலில் இதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை போகும் பாதையில் சென்றாள் மூலக்காடு, கொளத்தூர், பண்ணவாடி வருகிறது, பண்ணவாடியிலிருந்து மேலும் ஏழு கி.மீ. ஆற்றுக்குள்ளேயே பயணம் செய்ய வேண்டும். இப்படி சுமார் 25 கி.மீ. பயணித்தப்பிறகு நாம் தேடி வந்த ஜலகண்டீஸ்வரர் கோயிலும், அதற்கு முன்புரம் மிக உயர்ந்த நந்தி சிலையை பார்க்க முடியும்.
பாலவாடி
இதுதான் அந்த ஊரின் பெயர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவேரி ஆற்றின் கரையோரம் இருந்த ஊர் பாலவாடி. 500 குடும்பங்கள் வரை வசித்திருக்க வேண்டும்..இதற்குஅருகிலேயே காவேரி புரம் என்ற ஊரும் இருந்திருக்கிறது.இந்த இடத்தில்தான் 50 அடி உயரத்தில் ஜலகண்டேஸ்வரர் கோயிலும், சுமார் 40 அடி உயரத்தில் நந்தி சிலையும் இருக்கிறது.இங்கே இரண்டுவிதமான கருத்து நிலவுகிறது.ஒருசிலர் இந்தஇடத்தை –பாலவாடி என்றும், ஒருசிலர் காவேரி புரம் என்கின்றனர்.நாம் விசாரித்த வரை இந்த இடம் பாலவாடி தான்.
இரண்டு ஊர்களுமே ஒரு கி..மீ க்கும் குறைவான தூர இடைவெளியில் இருந்திருக்க வேண்டுமென மேட்டூரை சேர்ந்த நண்பர் கோபியும் , அருள்செல்வனும் தெரிவித்தனர்.இப்போது இந்த ஊர் மக்கள் எல்லாம் 10 கி.மீ தூரம் தள்ளி வந்து குளத்தூரில் இருந்து மேற்கு புரமாக 5.கிமீ. தூரத்தில் -பாலவாடி
மற்றும் காவேரி புரம் என்ற அதே ஊர் பெயர்களில் ஜலகண்டேஸ்வரர்க்கு கோயிலை கட்டி பழை கோயிலில் இருந்து எடுத்து வந்த மூலவர் சிலையையும் வைத்து வழிபாடு செய்துவருகின்றனர்.
கடந்த வாரம் நாம் சென்றிருந்த போது அணையின் நீர் இருப்பு 45 அடியாக குறைந்திருந்த காரணத்தால் ஜலகண்டேஸ்வரர் கோயிலின் அருகில் எளிதாக செல்ல முடிந்தது. கோயிலின் உட்புரத்தில் நுழைந்து பார்க்கமுடிந்தது. இந்த கோயில் கி.பி.பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் என்றும், இதை கட்டியவர்கள் கொங்கு சோழர்கள் என்றும், இந்த கோயிலின் அடி வாரத்தில் தமிழ் கல்வெட்டுகள் இருந்ததாகவும், தமிழக தொல்லியல் துறை படி எடுத்து வைத்திருப்பதாகவும், அந்த படிவங்கள் இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் , தருமபுரி அதியமான் வரலாற்று ஆய்யுமையத்தை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.அவரின் தொலைபேசி எண்-9443704519.
இங்கே இருக்கும் கோயிலும் ,நந்தி சிலையும் சுட்ட செங்கற்களையும் எளிதில் கரையாத சுண்ணாம்பு கலைவயை மேற்புரம் பூசியிருக்கிறார்கள். செங்கற்கள் சுமார் ஒருஅடிக்கு அரையடி நீள அகலமும், இரண்டு இன்ச் தடிமனும் கொண்டதாக இருக்கிறது. வெளிபுரத்தில் மட்டுமே கொஞ்சம் சிதிலமடைந்து காணப்படுகிறது. உட் புரசுவரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை..இங்கு இருக்கும் நந்தி சிலை மூலவரை நோக்கி பார்க்காமல் சிவன் பார்க்கும் திசையிலேயே நந்தியும் பார்க்கிறது.மாதேஸ்வரன் மலையிலிருக்கும் நந்தியும் இதே போலதான் சிவன் பார்க்கும் திசையிலேயே நந்தியும் பார்க்கிறது.கோயில் இருபதடிவரை சேற்றில் மூழ்கியிருக்கிறது.
நேயம்பாடி.
அதிகமாக கிருத்துவ மக்கள் வாழ்ந்த ஊர். இந்த ஊரின் வடக்குபுரமாகதான் பலநூறு ஆண்டுகளாக காவேரி ஆறு பாய்ந்தோடி பயணம் செய்திருக்க வேண்டும். இந்த ஊரின் மத்தியில்தான் நூறு அடி உயரத்தில் இரட்டை கோபுரங்களுடன் குழந்தையேசு ஆலயம் இருந்துள்ளது.இங்கும் சுமார் 500 குடும்பங்கள் வரை வாழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.அணையின் நீர் மட்டம் நூறு அடிக்கு குறையும் போதெல்லாம் இரண்டு கோபுரத்தின் சிலுவையும் முதலில் தெரிய ஆரம்பிக்கும்.காலப்போக்கில் அடிக்கடி மீனவர்களின் வலைகள் இந்த சிலுவையில் சிக்கி கொள்வதால் அந்த சிலுவைகளை மட்டும் அப்புரபடித்தினார்கள்.இப்போது ஒத்த கோபுரம் மட்டுமே உயரமாக அங்குவாழ்ந்த மக்களின் அடையாளமாக நிற்கிறது.மற்றோறு கோபுரம் பாதியளவு உடைந்த நிலையில் நிற்கிறது. இங்கே வாழ்ந்திருந்த மக்கள் எல்லாம் இப்போது கத்திரி மலைக்கு அருகில் அதன் அடிவாரத்தில் நேயம்பாடி.என்ற அதே பெயரில் மக்கள் வசித்து வருகிறார்கள்.
ஏர்கோல்பட்டி.
காவேரி ஆற்றின் கிழக்கு கரையோரமாக இருந்த ஊர்தான் ஏர்கோல்பட்டி.இதை சிலர் சோழப்பாடி என்றும் சொல்கிறார்கள். இங்கு வாழ்ந்த மக்களின் வழிப்பாட்டில் வீரபத்திரன் சாமி கோயில் இருந்திருக்கிறது. அணையின் நீர் மட்டம் நாற்பது அடிக்ககும் கீழே குறையும் போதெல்லாம் இந்த வீரபத்திரன் சாமி கோயில் வெளியில் தெரியும். பலமொழிகள் பேசும் மக்கள் நிறையபேர் வாழ்ந்திருக்க வேண்டும்.இப்போது தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலிருந்து நெருப்பூர் போகும் வழியில் அதே ஏர்கோல்பட்டி என்ற பெயறோடு வீரபத்திரன் சாமி கோயில் கட்டி மக்கள் வழிப்பாடு செய்து வருவதாக நண்பர் கோபி தெரிவித்தார்.
பண்ணவாடி பரிசல் துறைக்கு அருகில் தேங்கல் பாறைக்கு அருகில் மீனாச்சியம்மன் கோயில் இருந்தாகவும் தகவல் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.மேலும் பதினாறுகண் மதகுக்கு சற்று தொலைவிலும் அணையில் அதிக ஆழமான பகுதியாக கருதப்படும் அணைக்கு அருகில்தான் சாம்பள்ளி என்ற ஊர் இருந்திருக்கிறது..இப்போது புதுசாம்பள்ளி என்ற பெயரில் விரைவாக வளர்ந்துவரும் நகரமாக மாறியிருக்கிறது.
நமக்கு கண்ணூக்கு தெரிவது இந்த ஐந்து ஊர்கள் மட்டும்தான். ஆனால் ஒகேனக்கல்லிளிருந்து மேட்டூர் அணைவரை சுமார் அறுபது மைல் நீளம் காவேரி ஆற்றின் கரையின் இருபுரமும் சிறியதும் பெரியதுமாக தோறாயமாக அறுபது ஊர்கள் வரை இருந்திருபதற்கான வாய்ப்பு இருப்பதாக அங்குவசித்த ஊர் மக்களால் பேசப்படுகிறது. அதிகாரிகளால் அனாதைகளாக வெளியேற்றப்பட்டப்போது அங்கு வசித்த மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்.கைக்கு கிடைத்த தாணியங்களை மூட்டை கட்டி தலைமேல் வைத்துகொண்டு, பிள்ளைகளையும், கல்நடைகளையும் அழைத்துகொண்டு திக்குதெரியாமல் எங்கே போயிருப்பார்கள். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடங்களை விட்டு, நமது மண், நமது சந்தோசம், நமது கலாச்சாரம், என்று வாழ்ந்த நிலங்களை விட்டு எத்தனை பெரிய துக்கத்தோடு எல்லாத்தையும் மறந்த அகதிகளாக அவர்கள் எங்கே போயிருப்பார்கள், அப்படி வெளியேறும் போது ஒருபிடி மண்ணை முந்தானியில் முடிந்து கொண்டு போகும் அவர்களின் மனசு என்ன பாடு பட்டிருக்கும்.இதுவரை இவர்கலைபற்றி யாறேனும் எண்ணிபார்த்திருக்கோமா? அல்லது இந்த அரசுதான் எண்ணிபார்த்திருக்குமா? அறுபது ஊர் மக்களின் தியாகத்துக்கு பின்னாடி எவ்வளவு பெரியவலியிருந்திருக்கும்.அணைகட்டியதின் பயனை நாலுலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெருகிறது.ஒன்பது மாவட்டங்கள் பயன்பெருகிறது.புதுச்சேரி வரை குடிநீர் ஆதாரமாகயிருக்கிது.ஆனால் அணையில் மூழ்கிய அந்த ஊர்மக்களின் வாழ்வாதாரம் இப்போது எப்படி இருக்கிறது என்று யாருக்காவது தெறியுமா? இதனைப்பற்றி அரசுக்கு யோசனை வந்திருக்குமா?அப்போதும் மீன்பிடி தொழில்தான் .இப்போதும் அதே மீன்பிடிக்கும் தொழில்தான். மாற்றம் எங்கே வந்துவிடப்போகிறது.
அணையின் நீள அகளங்களையும், நீர் மட்டத்தின் உயர்வையையும், தாழ்வையும், மட்டுமே தினமும் உறுதி படுத்திகின்றன் தினப்பத்திரிக்கைகள்.
அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்தால் கிறித்துவ கோபுரம் தெரியும்
அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழ் சரிந்தால் ஜலகண்டேஸ்வரர் கோபுரமும் நந்தியும் தெரியும்
அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் சரிந்தால் வீரபத்திரன் கோயிலின் கோபுரம் தெரியும்
அணையின் நீர்மட்டம் 40 அடிக்கும் கீழ் சரிந்தால் மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரம் தெரியும்
இந்த வரலாறு மட்டும் தெரிந்தால் போதுமா?
அறுபது மைல் தூரத்துக்கு நீர் தேங்கி நிக்கலாம்.ஆனால் ஆயிரமாயிரம் மக்களின் வாழ்வாதாரம் அதற்குள் மூழ்கிபோய்விட்டதே.நீரை நிறுத்தி அணைக்கட்டிவிட்டோம்.மகிழ்ச்சிதான். மூன்று வருடத்திற்கு ஒரு முறை கூட முழுவதுமாக அணை நிறைவதில்லையே..காவேரியும் வரண்டுப்போச்சு.இருப்பிடத்தை விட்டு வெள்ளேந்தியாய் வெளியேரிப்போன மக்களின் நிலமையும் விரட்ட முடியாத விலங்கை மாட்டிக்கொண்டு அப்படியேதான் இருக்கிறது.
இன்னும் விரிவாக பிறகொரு நாளில்.
-அறம் கிருஷ்ணன்