Friday, 1 January 2016

காளையை அடுக்கும் வீரண்.

நடுகல் வரிசை எண்-55
காளையை அடுக்கும் வீரண்.
இந்த வருடத்தின் முதல் தகவலாக இதை பதிவிடுகிறேன்
தமிழ் நாட்டின் எல்லைநகரம் கும்ளாபுரம்
தெலுங்கு, தமிழ் , கன்னடம் , மூன்றும் கலந்து பேசும் மக்கள்
மாடு பிடி வீரணின் நடுகல்
ஆக்றோசமாக பாய்ந்து வந்த காளையை ஓருவீரன் இரண்டு கொம்புகளையும் பிடித்து தடுத்து நிறுத்து போல் உள்ளது
காளையை அடுக்கும் வீரண்.
14 ஆம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது
முன்னாடி இருக்கும் அம்மன் சிலை மறைத்து இருப்பதால்
சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை.
இந்த கோயிலின் முன்புரம் மண்டுஇருக்கிறது.ஓவ்வோரு வருடமும் கூலிகளை கட்டி ஊரப்பம் விழா எடுப்பதாக அவ்ஊர்
மக்கள் தெரிவித்தார்கள்.
கூலிகளை கட்டி வைப்பதற்காண இரண்டு கல்தூண்களையும்
காணமுடிந்தது.அந்த கல்தூண்களில் ஓருகுறியிடு இருக்கிறது
இந்த நடுகல் காளையை அடுக்கும் போது இறந்து போண ஓரு வீரணின் நினைவு கல்லாகதான் இருக்க முடியும்
எப்போது உணர போகிறது மத்திய அரசு?
தமிழர்களின் வாழ்க்கையோடும் ,
தமிழர்களின் வரலாறோடும் சேர்ந்தே பிறந்தது இந்த
வீர விளையாட்டு.
-அறம் கிருஷ்ணன்








No comments:

Post a Comment