Tuesday, 12 January 2016

அறம் கிருஷ்ணன் அகவை ஐம்பது - கடந்து வந்த பாதை

முக நூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நாளை(13.01.16) ஐம்பதாவது பிறந்த நாள்
அனைவரும்
வாழ்த்துங்கள்
வளர்கிறோம்
அறம் கிருஷ்ணன்
அகவை ஐம்பது -
கடந்து வந்த பாதை
அதற்குள் வந்து விட்டது
அரை நூற்றாண்டின் தொடக்கம்
காலபெருவெளியை
கடந்து வருவதற்குள்
நூறாண்டில் பாதி கரைந்தே போனது
திரும்பி பார்க்கிறேன்
கடந்து வந்த பாதை முழுவதும்
ரணமும், ரௌத்திரம் இறைந்தே கிடக்கிறது
எங்கிருந்து தொடங்கியது இந்த வாழ்க்கை
பிறந்தது ஒரிடம், வளர்ந்தது ஒரிடம்
கல்வி, திருமணம், வேலை ,
எல்லாம் வெவ்வேறு இடத்தில்
70 ல் தொடக்கப்பள்ளி
82- ல் பத்தாம் வகுப்பு இறுதி
84 -ல் பன்னிரண்டாம் வகுப்பு
88 ல் பாலிடெக்னிக் படிப்பு முடிந்தது
அதே ஆண்டில் அப்துல்ரகுமான் முன்னுரையோடு “அழகின் தாகம்” கவிதை நூல் வெளியீடு
89 -ல் ஒசூரில் வேலை தேடி அலைய தொடங்கியது
90-ல் "நந்தவனம் "சிற்றிதழ் தொடக்கம்
91-ஆம் ஆண்டு வரை உண்வுக்கும், உடைக்கும் பெரும் போராட்டம்
91-ல் வைரமுத்துவின் முன்னுரையோடு “பூகம்ப விதைகள்” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு
93 ஆம் ஆண்டு திருமணம்
94 – ஆம் ஆண்டு மகள் பிறப்பு
95 – ஆம் ஆண்டு மகன் பிறப்பு
2000 ஆம் ஆண்டில் புதிய நிறுவனத்தில் வேலை தொடக்கம்
2004 ஆம் ஆண்டில் மீண்டும் புதிய நிறுவனத்தில் வேலை தொடக்கம்
2009 ஆம் ஆண்டில் நண்பரோடு சேர்ந்து புதிய தொழிற்சாலை தொடக்கம்
2015 ஆம் ஆண்டில் அறம் இலக்கிய அமைப்பு , அறம் சமூக சேவை, தொடக்கம்
2015 ஆம் ஆண்டில் மூன்றாவது புத்தகம் திரு.பாலகுமாரன் அவர்களால் “இராசேந்திர சோழன் அரிய தகவல்கள்-1001” நூல் வெளியீடு
2016 –01-15 ஆம் நாளில் இரண்டாவது தொழிற்சாலை தொடங்க இருக்கிறோம்
முல்லைதாசனாய் இருந்தவன் தடம் மாறி
வரலாற்றை நேசிக்க தொடங்கி ..
இப்போது அறம் கிருஷ்ணனாக
அடையாளப் பட்டிருக்கிறேன்
-அறம் கிருஷ்ணன்











No comments:

Post a Comment