Thursday, 31 March 2016

புங்கமரம். இது இளவேனிற்காலம்

புங்கமரம்.
இது இளவேனிற்காலம்
சருகுகள் முழுவதும் உதிர்ந்து புதியதாக துளிர்க்கும்
ஏழு நாட்களுக்குள் எவ்வளவு மாற்றம்.
எனது சிறுவயதில் இந்த புங்கமரங்களோடடே சேர்ந்து வளர்ந்தவன் நான்.எனது தந்தை இருநூறு மரங்களுக்கு மேல் வளர்த்தார்.இந்த இலைகளைதான் கழனிக்கு உரமாக போடுவார்.
இந்த மரத்தின் இலைகள் உரமாகிறது.
சருகுகளை மக்கவைத்து அதுவும் அடி உரமாகிறது.
இதன் காய்கள் எண்ணைய்யாக பயண்படுகிறது
இதன் நிழலில் இரண்டு நிமிடங்கள் நின்று ஓய்வெடுத்து
பாருங்கள்.உலகம்மறந்து போகும் அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்.எழுந்துபோகவே மனசு வராது.
-அறம் கிருஷ்ணன்








Wednesday, 30 March 2016

கி.பி. 7 ஆம் நூற்றாண்டு பல்லவர் நடுகல்

கி.பி. 7 ஆம் நூற்றாண்டு பல்லவர் நடுகல்
தருமபுரி மாவட்டத்தில் பல்லவர்களின் அடையாளங்கள்
மிக குறைவு.
மிகவும் முக்கியமான பல்லவர்களின் நடுகல் இது.
எழுத்துக்கள் வட்டு எழுத்து வகையை சேர்ந்தது.
பாப்பாரப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட இந்த நடுகல்
இப்போதிருப்பது தருமபுரி அகழ் வைப்பகத்தில்
.
இந்த நடுகல்ளில் வீரன் ஒருவன் நின்ற நிலையில்
வலது கையை மடித்தும் , இடதுகையில் வில்லை ஏந்தியும் உள்ளான்.
கல்வெட்டு
" கோ ....வியை
ய ப ...ருமற்கு..
பந்தி .ரண்டாவது
ஊர் பொருளேரிந்
து பட்ட சான்று
...க்கா ......ற கிக "
-அறம் கிருஷ்ணன்

Tuesday, 29 March 2016

அதிசய சூரியகல் பருவ காலங்களை துல்லியமாக கணிக்கும் சூரியகல்

அதிசய சூரியகல் 
பருவ காலங்களை துல்லியமாக கணிக்கும் சூரியகல் இது.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டைக்கு அருகிலிருக்கும் சோமேஸ்வர கோயிலுக்கு முன்புரம் 
இக்கல் இருக்கிறது.
கடைஏழு வள்ளள்களில் ஒருவரான அதியமான் காலத்தில் இக்கல் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே சூரியன் பாதையை தட்சியாணம், உத்தரயாயாணம்
என இரண்டாக பிரித்து வைத்து
சூரியகல் வழியே சூரியஒளியை செலுத்தி அந்த வெளிச்சம் ஊடுருவி வெளியேரும்போது
அதன் நிழல் எவ்வளவு தூரம் நீள்கிறது என்பதை கணக்கிட்டு நேரத்தையும் , காலத்தையும் , துல்லியமாக
கணித்துள்ளனர்.
-அறம் கிருஷ்ணன்




Monday, 28 March 2016

எங்கள் வீட்டு நெல்லி கனி

எங்கள் வீட்டு நெல்லி கனி
இரண்டாவது அறுவடை
இருபது குடும்பங்களுக்கு 
பிரித்து வழங்கினோம்.





Friday, 25 March 2016

சென்றாய பெருமாள் கோயில்

சென்றாய பெருமாள் கோயில் 
தருமபுரிக்கு அருகில் அதியமான் கோட்டையில் இருக்கிறது.14 ஆம் நூற்றாண்டு கோயில்
விஜயநகர பேரரசு காலத்தில் சிவப்பு வண்ணத்தில் வரையபட்ட ஓவியங்கள் இன்னும் அழியாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இராமாயணம் மற்றும், மகாபாரத கதைகள் முழுவதும் ஓவியமாக வறையப்பட்டுள்ளது.பார்க்க மட்டும்தான் அனுமதி 
முதல் புகைப்படத்திலிருக்கும நான்கு சிறு தூண்களும்
எதற்காக பயண்பட்டிருக்கும்
இங்கு உடைந்த நிலையில் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
தொல்லியல் துறை இதை பதிவு செய்திருக்கிறாதாவென்று தெரியவில்லை.
கோயில் நல்ல பராமறிப்போடு இருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்









Thursday, 24 March 2016

சென்றாய பெருமாள் கோயில் அதியமான் கோட்டையையின் நுழைவாயிலாக

அதியமான் மன்னன் ஆட்சி செய்த காலத்தில்
அதியமான் கோட்டையையின் நுழைவாயிலாக இருந்த இடம் இப்போது சென்றாய பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.இந்த கோயிலின் உள்ளே விஜயநகர பேரரசு காலத்தில் சிவப்பு வண்ணத்தில் வரையபட்ட ஓவியங்கள் இன்னும் அழியாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இராமாயணம் மற்றும, மகாபாரத கதைகள் முழுவதும் ஓவியமாக வறையப்பட்டுள்ளது.பார்க்க மட்டும்தான் அனுமதி புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.வாய்ப்புள்ள அனைவரும் ஒரு முறை சென்று பாருங்கள்.
-அறம் கிருஷ்ணன்





Tuesday, 22 March 2016

எங்கள் வீட்டு நெல்லிகனி

எங்கள் வீட்டு நெல்லிகனி
இந்த வருடத்தின் முதல் அறுவடை
மரம் முழுவதும் கனிதான்
அருகில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
தினமும் கொடுத்து வருகிறோம்





Monday, 21 March 2016

புறநானூறு -நெல்லிக்கனி பாடல்

நெல்லிக்கனி பாடல்
நீண்ட நாள் உயிர்வாழ உதவும் கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவையாருக்கு வழங்கிய அதியமான்
அதற்கு சான்றாக விளங்கும் புறநானூறு பாடல் இது.
"ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி சாதல் நீங்க
எமக்கு ஈந்தனையே"
புறநானூறு பாடல்
-அறம் கிருஷ்ணன்




கரும்பை அறிமுக படுத்திய அதியமான்

கரும்பை அறிமுக படுத்திய அதியமான்
இந்தியாவுக்கே முதல் முலாக கரும்பை அறிமுகபடுத்தியவன் அதியமான்
அதனை விளக்கும் புறநானூறு பாடல்
“நெடுமான் அஞ்சி அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் அரும்பெறல் மரபின் கரும்பு இவண்கன தந்தும் நீர்அக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல் பொருள்”
புறநானூறு பாடல் எண் 99 பாடியவர் – ஔவையார் பாடப்பட்ட அரசன் – அதியமான்
-அறம் கிருஷ்ணன்



அதியமான் பெருவழி நடுகல்


அதியமான் பெருவழி நடுகல்
அதில் உள்ள வாசகம்
அதியமான் பெருவழி நாவற் தாவளத்திற்குக் காதம்-29
என்று எழுதப்பட்டுள்ளது. காதம்-29 என்ற எண்னுக்கு அருகில் இரண்டு பெரிய துவாரமும் ஓன்பது சிறிய துவாரமும் குழிகளாக செதுக்கப்பட்டுள்ளன.
பெரிய துவாரமும் ஒவ்வோன்றும் பத்துகாதமாகும் மீதி ஓன்பது சிறிய துவாரமும்
ஒவ்வோன்றும் ஓரு பத்துகாதமாகும் . நாவற் தாவளம் என்ற ஊர் எங்கு இருந்தது
என்பது இதுவரை கண்டுபிடிக்க வில்லை.இதன் காலம் 13 ஆம் நூறாண்டாக இருக்கும் கருதப்படுகிறது.இதை இராசராச அதியமானின் காலத்தை சார்ந்தாக இருக்கவேண்டும்.
-அறம கிருஷ்ணன்