Tuesday, 3 November 2015

மதுராந்தக வீர நுளம்பன் கொடுத்த நிலதானம்



மதுராந்தக வீர நுளம்பன் கொடுத்த நிலதானம்
வீரநரசிங்கன்-13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ வீர ந(ர)சிங்க தேவனுக்கு இயாண்டு யிரு வது பையூர்
நிலை உடைய மதுராந்தக வீர நுளம்பன் வையிரவன் விமலனேன் பெண்னை நாயனார்க்கு இவர் பணமும் நெல்லும்
அவரை மாச்சிய.......
த்தளவும் திரள் மாவுக்குக் கிழக்கும் ஆண்பி(ள்)ளை பெருமாள்
கொல்லையும் குரவாண்டை கொல்லையும் தட்டான் குட்டையும் மாதேவன் கொல்லையுமகப்பட விட்டு கொடுத்தோம்...
ல்லை சிறுக்கன் கொல்லையும் மேலை(மடை)யும் புளிய
மடை கட்டி கொள்ளக் கடவராகவும் (ஆ)க கொ....""
கல்வெட்டு விளக்கம்
மதுராந்தக வீர நுளம்பன் வையிரவன் விமலனேன் என்பவன்
பெண்னை நாயனார் கோயிலுக்கு பணமும், நெல்லும்,மற்றும் நிலதானம் அளித்ததை பற்றி குறிப்பிடுகிறது.
நித்தின் எல்லைகளா திரள் மாவுக்குக் கிழக்கும்.
ஆண்பிள்ளை பெருமாள் கொல்லையும்
குரவாண்டை கொல்லையும்
மாதேவன் கொல்லையும்
சிறுக்கன் கொல்லையும்
தட்டான் குட்டையும்
புளியமடை
மேலை மடை
போன்ற இடங்களை எல்லாம் விட்டு கொடுத்துள்தாக கூறப்படுகிறது.
இதில் தட்டான் குட்டை மட்டும் ஏரியாக இருக்க வாய்ப்புள்ளது.
பணமும், நெல்லு, கொல்லை , போன்றவார்த்தைகள் அப்போதே பயன்பாட்டில் இருந்துள்ளது.இப்போதும் அதே வார்த்தைகள் தான் பயன்பாட்டில் இருக்கிறது .
இந்த செய்தி கோயிலின் முகமண்டபத்தின் நுழைவாயிலின்
வலது புறத்தில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.


No comments:

Post a Comment