Saturday, 7 November 2015

என்ன நினைத்திருக்கும் அந்த உயிர்.

இன்று காலையிளிருந்து எல்லோர் மனதையும் வசப்படுத்தி வைத்திருந்த இந்த சிட்டுகுருவி சற்றுமுன் இறந்துவிட்டது.
அதன் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிராத்தனை செய்வோம்.
நான் தொடர்ந்து பதிவுகள் எழுதிவருகிறேன் .இதுவரை எந்த பதிவும் இவ்வளவு பேர் விருப்பம் தெரிவித்ததில்லை.
இதுவரை சுமார் 300 பேர் வரை விரும்பி கருத்து தெரிவித்து
வருகின்றனர்.
கருத்துகளை பதிவு செய்தவர்களுக்கும்
விருப்பத்தை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி.
இரவெல்லாம் தூங்காமல் செய்த இந்த சிட்டுகுருவி
இப்போது மறக்கமுடியாத வலியை ஏற்படுத்திவிட்டது.
இன்று மதியம் கூட அதன் இறகுகளை மென்மையாக வருடியபோது அதன் பயம் நீங்கி தலையை தூக்கி என்னைப்பார்த்தது.அந்த பார்வை அப்போது எனக்கு புரியவில்லை.
இப்போதுதான் புரிகிறது.அடைகலம் கொடுத்தமைக்கு நன்றியா..?
இல்லை போய்வருகிறேன் என்று சொல்லியிருக்குமோ.
என்ன நினைத்திருக்கும் அந்த உயிர்.
இப்போதுதான் மனசு தடுமாறுகிறது.அதை காப்பாற்ற தவறி விட்டோமோ என்று.
எல்லாவற்றிக்கும் மருத்துவமனை இருக்கும்போது.
இந்த பறவைளுக்கு இல்லாமல் போனது எப்படி?
சிறு உயிர்களை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும்அனைவரும் முன் வாருங்கள்.

ஓரு நிமிடம் அந்த சிட்டுகுருவிக்காக பிராத்தனை செய்யுங்கள்
அதன் ஆன்மா சாந்தியடையட்டும்
-அறம் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment