Thursday, 5 November 2015

இறைவனே பேசும் கல்வெட்டு



இறைவனே பேசும் கல்வெட்டு
கி.பி. 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ தண்டீசுரன் ஒலை தாபரஞ்சூழ் வைய்யத்து ச
ண்டீசன் தன் கருமம் ஆராய பண்டே யறஞ் செய்தான் செய்தா
ன் அறங்காத்தான் பாதம் திறம்பாமல் சென்னி மேல் வைத்து
நம்முடைய
பத்தன் கத்தாரியில் இருக்கும் வெள்ளாழரில் மாங்குடையான் முத லிப்பிள்ளை உலகன் சித்திரை திருநாளில் நம்முடைய
ஆறாந்திருநாள் சந்திரா
தித்தவரை நடத்த கடவனாகவும் நடத்தி ஓடுக்கும் வரிசையும்
பெற
க்கடவ
தாகவு(ம்)."
கல்வெட்டு விளக்கம்
தொடக்கத்தில் உள்ள வெண்பா பாடல் ஆதிசண்டேஸ்வரரை புகழும் படி உள்ளது.
இந்த வெண்பா பாடல் இறைவனே பேசுவதுபோல் உள்ளது.
இந்த கோயிலின் சித்திரைத் திருவிழாவில் ஆறாம் நாள் விழாவை கத்தாரி ஊரில் இருக்கும் வெள்ளாழனும்,
முதலிப்பிள்ளை உலகனுமான ஓரு பக்தன் தொடர்ந்து விழா
நடத்தவும், அவனுக்கு உரிய கோயில் மரியாதைகளை வழங்கவும், இறையானை வழங்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது.
இந்த செய்தி கோயிலின் தென்புறம் திருச்சுற்றுச்சுவரில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.


No comments:

Post a Comment