Monday, 2 November 2015

நூறு குழி நிலம் தானம்


நூறு குழி நிலம் தானம்
13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
.".கதவனநாயன தேவாரபள்ளி பெரிய...நுந்தா விளக்குக்கு னு
று குழி குடுத்தேன் உடையார் பெண்னை னாயினாற்கு.."
கல்வெட்டு விளக்கம்
பெண்னை நாயினாற்கு நந்தா விளக்கு எரிப்பதற்காக கதவனநாயன தேவாரபள்ளியைச் சேர்ந்தவள் நூறு குழி நிலம் கொடுத்ததை குறிக்கிறது.
தேவாரபள்ளி என்ற ஊர் இப்போது தேவரஅள்ளி என்று அழைக்கும் ஊராக இருக்கலாம்.
இந்த செய்தி கோயிலின் கருவரையின் வடக்குபுறம் நான்முகனுக்கு கீழ் குமுதத்தில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment