Friday, 13 November 2015

மூன்றாம் இராஜராஜன் சோழன் கல்வெட்டு...

மூன்றாம் இராஜராஜன் சோழன் கல்வெட்டு.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு(1233)
கல்வெட்டு செய்தி
."ஸ்ரீ இராராசதேவரற்கு யாண்டு ரு வது பைய்யூர் நிலை
உடைய மதுராந்தக வீரநுளம்பன் வையிரவன் வீமனேன்
பெண்ணைநாயினார் கோ(யி)ல் சிவபிஹணர் (செம்)பூண்டி
யாழ்வான் மகன் பெண்ணையாழ்வான் நாற்பத்தெண்ணாயிரப்
பட்டனுக்கு என்னேரி தட்டான் குட்டைக்கு அஞ்சு உதாரனும்
அஞ்சு சுத்த சலாகையும் ஆகப் பத்துபொன் அறக்கொண்டு மண்ணறக்குடுத்துத் திருச் சூலக்கல்லு நாட்டிக் குடுத்தேன்
வையிரவன் வீமநனேன்"
கல்வெட்டு விளக்கம்
மூன்றாம் இராஜராஜன் சோழனின் பதினைந்தாவது ஆட்சி
ஆண்டில் மதுராந்தக வீரநுளம்பன் வையிரவன் வீமன் என்பவன்
பெண்ணைநாயினார் கோயிளின் சிவபிராமணர் நாற்பத்தெண்ணாயிரப்பட்டன் என்பவரிடம் அஞ்சு உதாரனும்,
அஞ்சு சுத்த சலாகை என இருவகையான பத்துபொன்
பெற்றுகொண்டு தன்னுடைய தட்டான் குட்டை ஏரியை
சூலக்கல் நாட்டிற்கு தானமாக கொடுத்ததை இக் கல்வெட்டு.குறிப்பிடுகிறது.
இந்த செய்தி கோயிலின் கருவறை வடக்குப் பட்டிகையில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.



No comments:

Post a Comment