Wednesday, 4 November 2015

மூன்றாம் குலோத்துங்க சோழன்



மூன்றாம் குலோத்துங்க சோழன்
கி.பி. 1207 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்தங்க சோழனின் 29 ஆம் ஆட்ச்சியாண்டில் கொடுக்கப்பட்ட தானம்.
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீதிரிபுவநச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்ததுங்க சோழதேவற்கு யாண்டு இருபத்தொன்பதாவது முத்தையூரிலிருக்கும் வியபாரி(பரம்) பன் பேராயிரமுடையாநேன்
ஆளுடையார் பெண்னை(யாழ்வா)ருக்கு திருநுந்தா விளக்கும்
எறும்ப காணியும் வச்சேன்(பேரா)ண்டையேந்...."
கல்வெட்டு விளக்கம்
நூற்றாண்டில் மூன்றாம் குலோத்தங்க சோழனின் 29 ஆம் ஆட்ச்சியாண்டில் பெண்னை நாயனாருக்கு முத்தையுரைச் சேர்ந்த பேராயிரமுடையான் என்ற வியாபாரி நந்தா விளக்கு எரிப்பதற்காக நிலம் கொடுத்ததை குறிக்கிறது.
முத்தையூர் என்பது இப்போது முத்தூர் என்றழைக்கும் ஊராக இருக்கலாம்.
எறும்ப காணி என்பதுதான் என்னவென்று புரியவில்லை.
இந்த செய்தி கோயிலின் முகமண்டபத்தின் நுழைவாயிலின்
வலது புறம் குமுததில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.




No comments:

Post a Comment