Thursday, 5 November 2015

இயற்க்கையின் படைப்பில் சிட்டுகுருவிகள் ஓரு அதிசயம்.

எங்கள் வீட்டின் முன்புறம் 200 சிட்டுகுருவிக்கு மேல் தினமும் உணவுக்கு வருகின்றன.நாள்முழுவதும் அங்கேயே இருக்கும்
கடந்த இரண்டு வருடமாகவே இப்படிதான்.
ஆனால்
நேற்று ஓரு சிட்டுகுருவி வீட்டுக்குள் வந்து ஒடி வந்தது.
பறக்கமுடியாமல் தவித்தது.கையில் பிடித்து பார்த்தப்போது
தலையில் கண்ணுக்கு அருகில் அடிப்பட்டிருந்தது.பூனையோ, அல்லது எலியிடமோ பிடிப்பட்டு தப்பித்திருக்க வேண்டும்.
பகல்முழுவதும் வைத்திருந்து இரவு அதன் தாய்குருவிகளிடம்
சேர்த்துவிட்டோம்.ஆனால் இரவு முழுவதும் எங்களுக்கு உறக்கம்
இல்லை.காரணம் மீண்டும் பூனையிடம் அகப்பட்டுவிடுமோ என்ற
பயம்.அதுக்கேற்றார்போல் பூனை ஒன்று காத்திருந்தது.
விடிந்தவுடன் முதல் வேலையாக நானும் மனைவியும் தேடினோம்.மனைவிவியின் கண்ணுக்கு தெரிந்துவிட்டது.
பிடித்துவந்து வீட்டில் வைத்திருக்கிறோம்.இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி.அதன்சிறகுகளை தடவிகொடுக்கும் போது
பேரானந்தம்.வெகு நேரம் என் கைகளை விட்டு இரங்கமருத்தது.
இயற்க்கையின் படைப்பில் சிட்டுகுருவிகள் ஓரு அதிசயம்.
சிரு உயிர்களை நேசியுங்கள்.எதனினும் கிடைக்காத மகிழ்ச்சி
அங்கேதான் மறைந்திருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்.






No comments:

Post a Comment