Friday, 29 April 2016

இந்த சிற்பத்தை வைத்து நாம் என்ன புரிந்து கொள்ள முடியும்

இந்த சிற்பத்தை வைத்து நாம் என்ன புரிந்து கொள்ள முடியும்.
இதன் உள் குறியீடு எதை உணர்த்துகிறது
கன்றுக்கு பால் கொடுக்கும் பசு
பசுவின் பின் புரத்தில் ஆளுமையை விளக்குவதற்காக பல கைகளில் வில் அம்பு, பலவகையான கத்திகள் அல்லது குறுவாள்கல், சங்கு, குத்தீட்டி, மருத்துவ சோதனை கருவி,பாம்புபோன்றகருவி, 
இவற்றின் கருப்போருள் என்ன?
-அறம் கிருஷ்ணன்

இந்த சிற்பம் மிகையான கற்பனையாக கூட இருக்கலாம்

இந்த சிற்பம் மிகையான கற்பனையாக கூட இருக்கலாம்
ஆனாலும் புதியசிந்தனையாக இருக்கிறது.
அனுமாரின் வாலின் மீது நின்றபடி 
பெருமாள் சிவனை வழிப்படுவது எவ்வாறு.
சிவலிங்கத்தின் கீழிருப்பது மலையின் குறியீடா?
இதை வடித்த சிற்பி இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.
-அறம் கிருஷ்ணன்

Wednesday, 27 April 2016

இந்த இரண்டு இசை கலைஞர்களும் கையில் வைத்திருப்பது

இந்த இரண்டு இசை கலைஞர்களும்
கையில் வைத்திருப்பது என்ன வகையான
இசை கருவியாக இருக்கும்?
இசை இல்லாமல் எந்த நூற்றாண்டிளும்
மக்கள் வாழ்ந்திருக்க வாய்பேயில்லை போலும்
இசைதான் மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது
இந்த கற்சிற்பம் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
-அறம் கிருஷ்ணன்

Tuesday, 26 April 2016

இறைவனுக்கே கண் கொடுத்த கண்ணப்ப நாயனார்

இறைவனுக்கே கண் கொடுத்த 
கண்ணப்ப நாயனார்
இறைவன் மனிதனை சோதித்த கதை இது
மனிதன் இறைவனாக மாறிய கதையும் இதுதான்
கல் இறைவனாக கண்ணப்பனுக்கு தெரிந்தது-அதனால்
கண்ணப்பணின் கண்களுக்குள் கடவுள் தெறிந்தது
உறுப்பு தானத்தை முதன் முதலில்
உலகுக்கு சொன்னவன் வேடன்கண்ணப்பன்
இரண்டாவது கண்ணையும் எடுத்து வைக்கும் போது
இறைவனே தடுத்து ஆட்கொள்ளும் காட்சிதான்
நம் கண்முன்னே கற்சிலையாக
-அறம் கிருஷ்ணன்

Thursday, 21 April 2016

இடது காலில் முள் குத்திவிட்டது

வேட்டைக்கு போகும் வழியில் 
இடது காலில் முள் குத்திவிட்டது
விடுவானா வேடன் அந்த பெண்ணின் முள் தைத்த 
காலை தூக்கி தன்காலின் மேல் வைத்துகொண்டு 
நோவு தெரியாமல் நோண்டி எடுக்கிறான்.
அவளின் முதுகில் அம்பறா துணியுடன் அம்புகள்
அவள் ஒரு காலை தூக்கி ஒருகாலில் நிற்கும் போது
கீழே விழந்து விடாமல் இருக்க வலது கையால் அவனின்தலையை பிடித்துகொண்டும் இடதுகையால் வில்லை பிடித்தும் நிற்கிறாள்.
வேடனை மிக சிரியதாக படைத்த சிற்பி அந்த செதுக்கும் போது மட்டும் பிரமாண்டமாக செதுக்கியுள்ளான்.காரணம்தான் புரியவில்லை.
ஆனாலும் அழகு சிற்பம்
-அறம் கிருஷ்ணன்

இரண்டு முகம் கொண்ட அன்னபறவை

இது என்ன வகையான சிற்பம்
இரண்டு முகம் கொண்ட அன்னபறவை
இரண்டு கால்களிளும் இரண்டு யானைகள்
இரண்டு கைகளிளும் இரண்டு யானைகள்
இரண்டு வாய்களிளும் இரண்டு யானைகள்
மொத்தம் ஆறு யானைகளை ஏனிப்பப்படி தும்சம் செய்கின்றன.
-அறம் கிருஷ்ணன்

Saturday, 16 April 2016

எனது பிதாமகன் மாமன்னர் இராஜராஜ சோழனும்

எனது பிதாமகன்
மாமன்னர் இராஜராஜ சோழனும்
மாமன்னர் இராஜேந்திர சோழனும்
தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகள் பற்றியும்
தமிழ் மொழி வளர்வதற்கும் இன்றுவரை மிக உயர்ந்த 
நிலையைஅடைவதற்கு இவர்கள் ஆற்றிய பெரும்பணி பற்றியும் பேசினேன்.
அறம் இலக்கி அமைப்பு நடுத்திய சந்திப்பு-16
சித்திரை திருநாள் கொண்டாட்டம்
சிறப்பாகவே நடுந்து முடிந்தது
அறம் இலக்கி அமைப்பு மற்றும்
விஜய் வித்யாலயா பள்ளியும் இனைந்து நடுத்திய
இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த
பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,
பள்ளி மாணவ ,மாணவிகள்,
அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்
-அறம் கிருஷ்ணன்







Friday, 15 April 2016

சித்திரை திருநாள் கொண்டாட்டம்

சித்திரை திருநாள் கொண்டாட்டம்
சிறப்பாகவே நடுந்து முடிந்தது
அறம் இலக்கி அமைப்பு மற்றும்
விஜய் வித்யாலயா பள்ளியும் இனைந்து நடுத்திய
இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த
பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,
பள்ளி மாணவ ,மாணவிகள்,
அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்
கவியரங்கத்தை தலைமை ஏற்று நடத்திய பாவலர்
கருமலை தமிழாழன் அவர்களுக்கும், கவியரங்கத்தில் பங்குபெற்று கவிதை வாசித்த பள்ளி மாணவிகள், கவிஞர்கள் அனைவருக்கும்
பட்டிமன்றத்தை தலைமை ஏற்று நடத்திய திரு.கீரை பிரபாகரன், மற்றும் பெண்கள் அணிக்கு தலைமை வகித்த திருமதி.வளர்மதி,
ஆண்கள் அணிக்கு தலைமை வகித்து வயிறுகுலுங்க
சிரிக்கவைத்த திரு. மதுரை இராமநாதன் அவர்களுக்கும்
பட்டிமன்றத்தில் பங்குபெற்று பேசிய அறம் அங்கத்தினர்களுக்கும், அறம் இலக்கி அமைப்பு சார்பாக
அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
-அறம் கிருஷ்ணன்






Tuesday, 12 April 2016

கிருஷ்ணகிரி மலை கோட்டையில் இருக்கும் பாறை ஓவியங்கள் இவைகள்.

கிருஷ்ணகிரி மலை கோட்டையில் இருக்கும்
பாறை ஓவியங்கள் இவைகள்.
சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்
பாறை ஓவியங்கள் இரண்டு வகையான நிறங்களில்
இருப்பதை அறிவோம்.ஒன்று செந்நிறம், மற்றோன்று,
வெள்ளை நிறம்.
இப்போது நமக்கு கிடைத்திருப்பது வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட மிக நுட்பமான ஓவியங்கள்
தேர்போன்ற ஓவியம்
மனிதனை போன்ற ஓவியம்
மேலும் மரம், விலங்குகள், பறவை, போன்ற ஓவியங்கள்,
புரியாத நிறைய புதிய குறியிடுகளை கொண்ட ஓவியங்களும் உள்ளன.
-அறம் கிருஷ்ணன்





Sunday, 10 April 2016

மதுரை முத்துவிடமிருந்து "வரலாற்று பொக்கிஷம் "

ராஜ் டிவியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் கடந்தசனிக்கிழமை (09.04.16) அன்று நடைப்பெற்றது. அந்த விழாவில் பட்டிமன்ற நடுவராக 
கலந்து கொண்ட மதுரை முத்துவிடமிருந்து "வரலாற்று பொக்கிஷம் " விருதினை பெற்றுகொண்டதில் பெருமகிழ்ச்சி.
-அறம் கிருஷ்ணன்



Thursday, 7 April 2016

அறம் இலக்கி அமைப்பின் சந்திப்பு-16 சித்திரை தமிழ் திரு நாள் வரும் 14.04.16

அனைவருக்கும் வணக்கம்
அறம் இலக்கி அமைப்பின் சந்திப்பு-16
சித்திரை தமிழ் திரு நாள் வரும் 14.04.16 வியாழக்கிழமை வருகிறது அதை முன்னிட்டு
அறம் இலக்கி அமைப்பு மற்றும் விஜய் வித்யாலயா பள்ளியும் இனைந்து இந்த சித்திரை திருநாளை கொண்டாட இருக்கிறோம்.அது சமயம் கவிரங்கம், பட்டிமன்றம் நடைப்பெற உள்ளது.
நாள்;14.04.16 வியாழக்கிழமை
இடம்;விஜய் வித்யாலயா மேல்நிலை பள்ளி, மாணவர்விடுதி அரங்கம்
நேரம்; மாலை 4 மணிக்கு
சித்திரை திருநாளை
சிறப்புடன் கொண்டாடுவோம்
அனைவரும் வாருங்கள்.
வாருங்கள்.
வரலாற்றை நேசிப்போம்
வரலாற்றை வாசிப்போம்
-அறம் கிருஷ்ணன்

Wednesday, 6 April 2016

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஓசூரில் ராஜ் டி வியின் பட்டிமன்றம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஓசூரில்
ராஜ் டி வியின் பட்டிமன்றம்
மதுரை முத்து தலைமையில் நடைப்பெற இருக்கிறது
இடம்-சூடப்பா திருமண மண்டபம் ரிங்ரோடு அருகில் ஓசூர்
படைப்பிடிப்பு நாள்; 09.04.16 சனிக்கிழமை மாலை -4 மணி
இதன் ஒளிப்பரப்பு வரும் 14 04.16 அன்று ராஜ் டி வியில்
ஒளிப்பரப்பாகும்
வாய்ப்புள்ள அனைவரும் வாருங்கள்.
வாய்விட்டு சிரியுங்கள்.
-அறம் கிருஷ்ணன்.


Tuesday, 5 April 2016

இராவணன் மரச்சிற்பம் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது

இராவணன் மரச்சிற்பம்
15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
அதிசயமான மரச்சிற்பம் இது
சிவனின் வாகனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இராவணனுக்கு மொத்தம் பத்துதலைகள்தான்
இருக்கும்.ஆனால் இந்த மரச்சிற்பத்தில் ஒன்பது தலைகள்தான் இருக்கிறது.
இதற்கான காரணம் பத்தாவது தலை வீணையின் மேல்பகுதியில் இருக்கின்றது.தன் உடம்பிலிருந்த
நரம்பை எடுத்து வீணையில் இணைத்து வீணைவாசித்ததாக இராவணணின் வரலாறு சொல்கிறது.
இராவணன் மிகசிறந்த சிவபக்த்தன் என்பது யாவரும் அறிந்ததுதான்.
பொதுவாக கோயில்களில் உற்சவமூர்த்தியை வாகனத்தில் வைத்து கோயிலை சுற்றி வருவார்கள்.
அப்படி சுற்றி வருப்போது நந்தி, சிம்மம், மயில், அன்னம்
போன்ற வாகனத்தில் வைத்து சுற்றுவார்கள்.அதே போன்றதுதான் இராவணன் மரச்சிற்பம் வாகனமும்.
காரிமங்கலத்தில் கண்டு எடுக்கப்பட்ட இச்சிற்பம்
இப்போது இருப்பது தருமபுரி அகழ்வைப்பகத்தில்
-அறம் கிருஷ்ணன்

Saturday, 2 April 2016

குழல் ஊதும் கண்ணன் சிற்பம் கி.பி 15 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்

குழல் ஊதும் கண்ணன் சிற்பம்
கி.பி 15 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்
கண்ணன் குழல் ஊதுகின்ற நிலையில் புடைப்பு சிற்பமாக
பின்னிரண்டு கைகளில் சங்கும், சக்கரமும் உள்ளன
கண்ணனின் இரண்டு பக்கங்களிலும் ஏழு பெண்கள்
அவரின் குழல் ஓசையில் மயங்கியப்படி நிற்கின்றனர்
வலது புரம் உள்ள நான்கு பெண்களின் இடது கைகளில்
தாமரை மொட்டு போன்று வைத்துள்ளர்
இடது புரம் உள்ள மூன்று பெண்களின் வலது கைகளில்
கிளியும் உள்ளது.
ஏழு பெண்களின் தலையலங்காரமும் வெவ்வேறு வகைகளில் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த சிற்ப்பத்தின் கீழே கால்நடைகள், பாம்பு, போன்றவை 
இசை வரும் திசையை நோக்கி நிற்கின்றன.
மாதேமங்கலத்திலிருந்து கண்டுபிடிக்கபட்ட இச்சிற்பம்
இப்போது தருமபுரி அகழ் வைப்பத்தில் இருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்