Saturday, 2 April 2016

குழல் ஊதும் கண்ணன் சிற்பம் கி.பி 15 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்

குழல் ஊதும் கண்ணன் சிற்பம்
கி.பி 15 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்
கண்ணன் குழல் ஊதுகின்ற நிலையில் புடைப்பு சிற்பமாக
பின்னிரண்டு கைகளில் சங்கும், சக்கரமும் உள்ளன
கண்ணனின் இரண்டு பக்கங்களிலும் ஏழு பெண்கள்
அவரின் குழல் ஓசையில் மயங்கியப்படி நிற்கின்றனர்
வலது புரம் உள்ள நான்கு பெண்களின் இடது கைகளில்
தாமரை மொட்டு போன்று வைத்துள்ளர்
இடது புரம் உள்ள மூன்று பெண்களின் வலது கைகளில்
கிளியும் உள்ளது.
ஏழு பெண்களின் தலையலங்காரமும் வெவ்வேறு வகைகளில் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த சிற்ப்பத்தின் கீழே கால்நடைகள், பாம்பு, போன்றவை 
இசை வரும் திசையை நோக்கி நிற்கின்றன.
மாதேமங்கலத்திலிருந்து கண்டுபிடிக்கபட்ட இச்சிற்பம்
இப்போது தருமபுரி அகழ் வைப்பத்தில் இருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment