Thursday, 21 April 2016

இடது காலில் முள் குத்திவிட்டது

வேட்டைக்கு போகும் வழியில் 
இடது காலில் முள் குத்திவிட்டது
விடுவானா வேடன் அந்த பெண்ணின் முள் தைத்த 
காலை தூக்கி தன்காலின் மேல் வைத்துகொண்டு 
நோவு தெரியாமல் நோண்டி எடுக்கிறான்.
அவளின் முதுகில் அம்பறா துணியுடன் அம்புகள்
அவள் ஒரு காலை தூக்கி ஒருகாலில் நிற்கும் போது
கீழே விழந்து விடாமல் இருக்க வலது கையால் அவனின்தலையை பிடித்துகொண்டும் இடதுகையால் வில்லை பிடித்தும் நிற்கிறாள்.
வேடனை மிக சிரியதாக படைத்த சிற்பி அந்த செதுக்கும் போது மட்டும் பிரமாண்டமாக செதுக்கியுள்ளான்.காரணம்தான் புரியவில்லை.
ஆனாலும் அழகு சிற்பம்
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment