Wednesday, 30 December 2015

கிருஷ்ணகிரியில் உள்ள நடுகல் இது.

கிருஷ்ணகிரியில் உள்ள நடுகல் இது.
குதிரையின் மேல்லிருப்பது ஐயனார் போலிருக்கிறது 
ஏழுசப்த கன்னியர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது
குதிரைக்கு கடிவாளம் இருக்கிறது,
முதுகின் மேல் சேனம் போல் ஏதோ ஓன்று கட்டபட்டிருக்கிறது. சப்த கன்னியர்கல் கைகளில் குடுவைபோல் இருக்கிறது,
வில் இருக்கிறது,
குத்துவாள்இருக்கிறது,
வளரிக் கைத்தடி போலும் இருக்கிறது,
பின்னாடிதெரிவது குடையா ?,
கைவிரல்கள் போல் ஓன்று இருக்கிறது,
இவர் யார்? எந்த நூற்றாண்டாக இருக்கும் ...
பதிவிடுங்கள்.
-அறம் கிருஷ்ணன்


குதிரை குத்தப்பட்டான் நடுகல் சின்ன கொத்தூர் நடுகல்

குதிரை குத்தப்பட்டான் நடுகல்
சின்ன கொத்தூர் நடுகல்
இப்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் இருக்கிறது
14 ஆம் நூற்றான்டு நடுகல்
வீரனின் வலது கையில் குத்துவால் இருக்கிறது
இடது கையில் உள்ளவாளால் குதிரையை குத்தும் நிலையில் உள்ளான்.இடையில் குறு வாள் இருக்கிறது
சிற்பத்திற்கு மேலே தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
கல்வெட்டு செய்தி
".....ஸ்ரீ பூர்வாதியார் குமரணானச் சக்கர சி
றுப்பி.ள்ளைகளில் சொக்கத் கருவாயன் பள்
ளி இடு பூசலில் குதிரை குத்தி பட்டான்.."
கல்வெட்டு விளக்கம்
பூர்வாதியார் என்பவருடை பிள்ளைகளில் சொக்கன் என்பவன் பூசலில் ஈடுபட்டு
குதிரையை குத்தும்போது இறந்து போய்யிருக்கிறான்.இந்த போர் நடந்த இடம் கருவாயன் பள்ளியாக இருக்க வேண்டும்.
-அறம் கிருஷணன்.

Friday, 25 December 2015

பிற்கால சோழர்கள். என் உரையின் சுருக்கம் -பகுதி-2









பிற்கால சோழர்கள்.
என் உரையின் சுருக்கம் -பகுதி-2
கொங்கு மண்டலத்தில் இராசேந்திர சோழனை பற்றி
விரிவாக பேசுவதற்காண முதல் வாய்ப்பை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஏற்படுத்தி கொடுத்தது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 32 வாது சந்திப்பு(20.12.15)
ஐம்பது நிமிட வரலாற்று உரை
பிற்கால சோழர்கள்.
முதலாம் இராஜராஜ சோழன் மற்றும்
முதலாம் இராஜேந்திர சோழன் .
பிற்கால சோழர்களில் இந்த இருவரின் காலம்தான் சோழர்களின் பொற்காலம் மட்டுமில்லை தமிழர்களின் பொற்காலமும் அதுதான்..கல்வி, நீர்மேலாண்மை, நிலம் அளவை, கட்டிடகலை, சிற்ப்பக்கலை, ஒவியகலை, போர்முனையில் தொடர்வெற்றிகள், தரைவழிப்போர்,கடல்வழிப்போர், கல்வெட்டுகள், செப்பேடுகள், என எல்லாவற்றிலும் தமிழ் மொழியை முன்னிலைபடுத்தியது, பக்திஇலக்கியமான தேவாரம், திருவாசகத்தை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடியது,
சைவத்தை மட்டும் வளர்க்காமல் அதற்கு இணையாக வைணவம்,பொளத்தம்,என மற்ற வழிப்பாட்டு முறைகளையும்
ஊக்கப்படுத்தியது, இப்படி எல்லாவற்றிலும் வளர்ச்சியிருந்தகாரணத்தினால் இவர்களின் காலம் பொற்காலமாக இருந்தது.அதனாலேயே ஔவையும் "சோழநாடு சோறுடைத்த நாடு" என்று பாடியிருக்கவேண்டும்.
இவர்களின் காலத்தில் எல்லாவற்றிக்கும் வரிகள் விதிக்கப்பட்டன.வரிப்பணத்தில் ஏரி, குளங்கள் வெட்டுதல், நீர்பாசனகால்வாய்கள் அமைத்தல், காவிரிஆற்றின் கரைகளை உயர்த்தி கட்டுதல் இப்படி பெரும்பகுதி வரிபணத்தை இதற்காகவே பயண்படுத்தியிருக்கவேண்டும்.
முன்னவர்கள் விதித்த வரிகளை எல்லாம் பின்னர் வந்த மகள்வழி வாரிசான முதலாம் குலோந்தங்க சோழன் அனைத்துவரிகளும் நீக்கியதால் "சுங்கம் தவிர்த்த சோழன் எனப்பெயர் பெற்றான்.மூன்றாம் குலோந்தங்க சோழன் காலத்தில் இருந்தே சோழர்களின் எல்லை குறுக தொடங்கியது.
இப்படி முதலாம் இராஜராஜ சோழன் மற்றும்
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்திற்கு போன
சோழர்களின் வளர்ச்சி அதே பெயரை கொண்ட
மூன்றாம் இராஜராஜ சோழன் மகன் மற்றும்
மூன்றாம் இராஜேந்திர சோழன் காலத்தோடு சோழர்களின் வரலாறு முடிவுக்கு வந்தது.
அடுத்த பகுதி
இராசேந்திரசோழனின் தரைவழிப்போரும்
கடல் வழிப்போரும்,
கங்கையும், கடாரமும் எப்படி வசப்பட்டது?
கஜினி முகமதுவும் இராசேந்திரசோழனும் சந்திக்காமல்போனது எதனால்?
-அறம் கிருஷ்ணன்

Monday, 21 December 2015

கொங்கு மண்டலத்தில் இராசேந்திர சோழனை பற்றி

என் உரையின் சுருக்கம் -பகுதி-1
கொங்கு மண்டலத்தில் இராசேந்திர சோழனை பற்றி
விரிவாக பேசுவதற்காண முதல் வாய்ப்பை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஏற்படுத்தி கொடுத்தது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 32 வாது சந்திப்பு(20.12.15)
ஐம்பது நிமிட வரலாற்று உரை
வந்திருந்தவர்களில் பெரும்பாலணவர்கள் இளையதலைமுறை
அதுவும் பாதிஆண்கள் , பாதி பெண்கள்.
இவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற தயக்கத்துடன்தான்பேச்சை தொடங்கினேன்.
ஆயிரம் ஆண்டு சோழவரலாற்றை அரைமணி நேரத்தில்
எப்படி சொல்வது என்ற அச்சமும் இருந்தது.
எங்கு தொடங்கியது சோழம்
கி,மு-3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.-3 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகள் சங்ககால சோழர்களின் ஆட்சி
இந்த காலகட்டத்தில் நாம் அறிந்தவர்களில் முக்கியமாணவர்கள்
சிபி சோழன், மனுநீதி சோழன், கல்லணை கட்டிய கரிகால சோழன்.
கி,பி-3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.-9 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகள் .சோழர்களின் இருண்டகால ஆட்சி
இந்த காலகட்டத்தில் ,களப்பிரர், பல்லவர்கள், பாண்டியவர்கள்,
போன்ற அரசர்களிடம் குறுநில மன்னர்களாக, படைத்தளபதிகளாக,பெரியஅதிகாரம் ஏதும் இல்லாதவர்களாக
வாழ்ந்தார்கள்.
கி,பி-8 ஆம் நூற்றாண்டு இறுதியில் தொடங்கி கி.பி.-13ஆம் நூற்றாண்டு வரை சுமார் 500 ஆண்டுகள் .சோழர்களின்
பொற்காலஆட்சி.
பிற்கால சோழர்களின் ஆட்சியை தொடங்கிவைத்த பெருமை விஜயாலய சோழனையே சாரும்.இவனை தொடர்ந்து வந்த
ஆதித்த சோழன், பராந்தக சோழன், கண்டாரதித்த சோழன்,
அரிஞ்சேய சோழன், சுந்தர சோழன், இராஜராஜ சோழன்,
இராசேந்திர சோழன், இரண்டாம் இராசேந்திர சோழன்,
இராஜாதிராஜன், வீர இராஜேந்திரன்,விக்கிரமசோழன்,
முதலாம் குலோந்தங்க சோழன்,இரண்டாம் குலோந்தங்க சோழன்
மூன்றாம் குலோந்தங்க சோழன், மீண்டும் மூன்றாம் இராஜராஜ சோழன்,மூன்றாம்இராசேந்திர சோழனோடு முடிந்து போனது
சோழர்வரலாறு.
-அறம் கிருஷ்ணன்



Friday, 18 December 2015

கிருஷ்ணகிரியின் அழகு

கிருஷ்ணகிரியின் அழகு
சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது
கிருஷ்ணகிரி நகரத்துன் அழகைப்பார்க்கலாம்
நீண்டு கொண்டே செல்லும் 
கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலை
அதை ஓட்டிய குறுக்கு சாலைகள்
டோல்கேட்
சுற்றியிருக்கு ஏரிகள்
தூரத்தே தெரியும் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம்
இரட்டை மலைகள்.
கூசு மலை
-அறம் கிருஷ்ணன்







Thursday, 17 December 2015

இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி முழுவதும்

மாமன்னர் இராஜராஜ சோழன் கட்டிய
தஞ்சை பெரிய கோயிலில்
இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி முழுவதும்
இங்கே கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
பெரிய கோயிலின் பல இடங்களில் மெய்கீர்த்திசெதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த இடத்தில் முழுவதும் படிக்கலாம்.
-அறம் கிருஷ்ணன்



வரலாற்று எச்சங்கள்.21

வரலாற்று எச்சங்கள்.21
இதுதான் கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உயரமான பகுதி
அதன் உச்சிக்கு போய் பார்க்க முடியாதவர்களுக்காக இந்த புகைப்படங்கள்.
உச்சியிலிருந்து பார்க்கும்போது இந்த பூமி இன்னும் அழகாகவும், அதிசயமாகவும் தெரிகிறது.
வாழ்க்கையின் உயரத்தை தொடுகிறோமோ இல்லையோ
இந்த மலையின் உயரத்தை தொட்டு பாருங்கள்
இன்பம் எதுவரை என்பதை உணரமுடியும்
--அறம் கிருஷ்ணன்












வரலாற்று எச்சங்கள்.20

வரலாற்று எச்சங்கள்.20





கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உச்சியில்
அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று எச்சங்கள்
வட்டவடிவமான ஓரு பாறை
பாறையை சுற்றியும் தரையோடு சேர்த்து மூடி இருக்கிறது
நான்குபுரமும் வாசல் இருக்கிறது
உள்ளே பார்த்தால் மிக பிரமாண்டமாக அடுக்கடுக்காக தளம் அமைக்கப்பட்டுள்ளது..
உக்காரமுடியும் , படுத்து உறங்க முடியும் எழுந்து நின்று பேசமுடியும்.இப்படி எல்லாவசதிகளோடு, எதற்க்காக?
அமைச்சர்களோடு ஆலோசனைசெய்யும் இடமாக இருக்கவேண்டும்.அல்லது தப்பு செய்பவர்களை அழைத்துவந்து
தண்டணைகொடுக்கும் இடமாக இருக்கவேண்டும்
சுமார் 300 நபர்கள் வரை அமரமுடியும்.
சமணர் படுக்கையை போல் .அமைக்கப்பட்டுள்ளது.
-அறம் கிருஷ்ணன்

Wednesday, 16 December 2015

வரலாற்று எச்சங்கள்.19

வரலாற்று எச்சங்கள்.19
கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உச்சியில்
அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று எச்சங்கள்
19 ஆம் நூற்றான்டின் தொடக்கம் வரை இந்த இடங்கள்
பயன்பாட்டில் இருந்திருக்கவேண்டும்
இந்த மலை முழுவதுமே உடைந்த பானை ஒடுகள் ஏராளமாக
காணப்படுகின்றன.
அதுவும் ஒரிடத்தில் தோண்டப்படாத ஓரு பானையின் முகப்பு
வெளியே தெரிகிறது.
தொல்லியல் துறை இன்னும் ஆய்வு பண்ணவேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன.
-அறம் கிருஷ்ணன்.



வரலாற்று எச்சங்கள்.18.
கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உச்சியில்
அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று எச்சங்கள்
சையத்பாட்ஷா மலையின் பாறையில் செதுக்கப்பட்டுள்ள 
அனுமார் கற்சிலைகள்.
மலை கோட்டை யின் உச்சியில் தர்கா இருக்கிறது
இடைப்பகுதியில் அனுமார் கற்சிலைகள். இருக்கிறது
17 அல்லது 18 ஆம் நூற்றாண்டு கற்சிலைகளாக இருக்கலாம்
-அறம் கிருஷ்ணன்