Friday, 25 December 2015

பிற்கால சோழர்கள். என் உரையின் சுருக்கம் -பகுதி-2









பிற்கால சோழர்கள்.
என் உரையின் சுருக்கம் -பகுதி-2
கொங்கு மண்டலத்தில் இராசேந்திர சோழனை பற்றி
விரிவாக பேசுவதற்காண முதல் வாய்ப்பை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஏற்படுத்தி கொடுத்தது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 32 வாது சந்திப்பு(20.12.15)
ஐம்பது நிமிட வரலாற்று உரை
பிற்கால சோழர்கள்.
முதலாம் இராஜராஜ சோழன் மற்றும்
முதலாம் இராஜேந்திர சோழன் .
பிற்கால சோழர்களில் இந்த இருவரின் காலம்தான் சோழர்களின் பொற்காலம் மட்டுமில்லை தமிழர்களின் பொற்காலமும் அதுதான்..கல்வி, நீர்மேலாண்மை, நிலம் அளவை, கட்டிடகலை, சிற்ப்பக்கலை, ஒவியகலை, போர்முனையில் தொடர்வெற்றிகள், தரைவழிப்போர்,கடல்வழிப்போர், கல்வெட்டுகள், செப்பேடுகள், என எல்லாவற்றிலும் தமிழ் மொழியை முன்னிலைபடுத்தியது, பக்திஇலக்கியமான தேவாரம், திருவாசகத்தை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடியது,
சைவத்தை மட்டும் வளர்க்காமல் அதற்கு இணையாக வைணவம்,பொளத்தம்,என மற்ற வழிப்பாட்டு முறைகளையும்
ஊக்கப்படுத்தியது, இப்படி எல்லாவற்றிலும் வளர்ச்சியிருந்தகாரணத்தினால் இவர்களின் காலம் பொற்காலமாக இருந்தது.அதனாலேயே ஔவையும் "சோழநாடு சோறுடைத்த நாடு" என்று பாடியிருக்கவேண்டும்.
இவர்களின் காலத்தில் எல்லாவற்றிக்கும் வரிகள் விதிக்கப்பட்டன.வரிப்பணத்தில் ஏரி, குளங்கள் வெட்டுதல், நீர்பாசனகால்வாய்கள் அமைத்தல், காவிரிஆற்றின் கரைகளை உயர்த்தி கட்டுதல் இப்படி பெரும்பகுதி வரிபணத்தை இதற்காகவே பயண்படுத்தியிருக்கவேண்டும்.
முன்னவர்கள் விதித்த வரிகளை எல்லாம் பின்னர் வந்த மகள்வழி வாரிசான முதலாம் குலோந்தங்க சோழன் அனைத்துவரிகளும் நீக்கியதால் "சுங்கம் தவிர்த்த சோழன் எனப்பெயர் பெற்றான்.மூன்றாம் குலோந்தங்க சோழன் காலத்தில் இருந்தே சோழர்களின் எல்லை குறுக தொடங்கியது.
இப்படி முதலாம் இராஜராஜ சோழன் மற்றும்
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்திற்கு போன
சோழர்களின் வளர்ச்சி அதே பெயரை கொண்ட
மூன்றாம் இராஜராஜ சோழன் மகன் மற்றும்
மூன்றாம் இராஜேந்திர சோழன் காலத்தோடு சோழர்களின் வரலாறு முடிவுக்கு வந்தது.
அடுத்த பகுதி
இராசேந்திரசோழனின் தரைவழிப்போரும்
கடல் வழிப்போரும்,
கங்கையும், கடாரமும் எப்படி வசப்பட்டது?
கஜினி முகமதுவும் இராசேந்திரசோழனும் சந்திக்காமல்போனது எதனால்?
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment