Saturday, 31 October 2015

பிச்சை எடுப்பது தவறு என்று சொன்ன முதல் மன்னன்.



பிச்சை எடுப்பது தவறு என்று சொன்ன முதல் மன்னன்.
வயிற்றுப்பசியோடு யாரும்
வாழ்ந்திட கூடாது .என்று யோசித்த ஒரு மன்னன்
அதற்காண அரசானையும், அதனை எப்படி செயற்படுத்த வேண்டும் என்ற முறையையும்,
அரசானையை கடைப்பிடிக்காத மக்களுக்கும்
அதனை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு என்ன தண்டனை
என்ற விவரங்களை கல்வெட்டாக செதுக்கி வைத்துள்ளான்
போசள அரசன் வீர இராமநாதன் .
ஆண்டு-கி.பி.1295
அரசு - போசளர்
மன்னன் -வீரராமநாதன்
கல்வெட்டு செய்தி
"ஸ்ரீ...ஸ...தி..ஹொ(சள) ஸ்ரீவீரராமநா(த) வரீஸர்க்கு
யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்னையாண்டார் மட த்திலும் பெண்னை நாயனார் தேவதானமாக (ஊ)ர்களிலும் ஓரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனு
மொருவர் வந்து விட்டது விடாம(ல்) சோறு வேண்டுதல்
மற்றோதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்தாருண்டாகில்
தாங்களே அவர்களைத் தலை
யை அறுத்துவிடவும் அப்படி செய்திலர்ளாதல் தங்கள்
தலைகளோடே போமென்னும்படி றயப்புத்த பண்ணி இதுவே
சாதன
மாகக்{கொ}ண்டு அங்கு வந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆசைஜ பண்ணிக் கொள்ளவும் சீ காரியமாகத்
தாங்க......த....போதும் போன அமுதபடிக் குடலாக ஸவ
மாணியமாகக் குடுத்தோம் அனைத்தாயமும் வி
ட்டுக்கு.... கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம் இப்படி....தெ இதுக்க்கு வில
ங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவை கொன்றான் பாவத்தைக் கொள்வான் "
கல்வெட்டு விளக்கம்
வீர இராமநாதன் எனும் போசள அரசனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓரு யோசனை தோன்றியிருக்கிறது.
பாடுபடுகிற எவரும் பசியோடு இருக்க கூடாது.
அதற்காக மடத்தை கட்டி
அந்த மடத்திற்கு அதை சுற்றியுள்ள பலஊர்களை தேவதானமாக எழுதிவைத்துவிடுகிறான்.
அப்படி தேவதானமாக எழுதிவைத்த ஊர்களில் உள்ளவர்களும், மடத்தில் தங்கியிருப்பவர்களும் யாரும் சோற்றுக்காக பிச்சை எடுக்க கூடாது. அப்படி யாராவது சோறு கேட்டு வந்தாலோ அல்லது பிச்சை எடுத்தாலோ அவர்களின் தலையை அறுத்துவிட வேண்டும்.
இதை பார்த்து கொண்டு அரசானையை பின்பற்றாத அதிகாரிகளின் தலையையும் அறுத்துவிட வேண்டும்.
பெண்ணேஸ்வரமடத்து இறைவனுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகைகள், மாநியங்கள், அதிகாரிகளாளும் பிற சிற்றரசுகளாளும், இடையூர் இன்றி நடைப்பெற வேண்டும்
என்ற நோக்கத்தில்தான் வீர இராமநாதன் ஓரு கடுமையான
அரசானையை வெளியிட்டுள்ளான்
.
கோயில் மற்றும் மடத்திற்கு வரவேண்டிய வருவாய்களை தடை செய்தாலோ, அல்லது சோறு கேட்டு வந்தாலோ, அவர்கள் சிரச்சேதம் செய்யப்படவேண்டும் என இவ்வானை குறிப்பிடுகிறது.
அவர்கள் அதிகாரிகள், கணக்கர், காரியம்செய்பவர், கூசர், என இந்த அரசானையை இவர்கள் யாரும் மீரக்கூடாது.
சோறு வேண்டுதலும், பிற நலிவுகள் செய்தலும் தவறு.
இந்த செய்தி கோயிலின் தெற்குச் திருச்சுற்று சுவர் பீடத்தில்
உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.



Thursday, 29 October 2015

விஜய நகர மன்னர்கள் எதற்கெல்லாம் வரி வசூளித்தார்கள்..



விஜய நகர மன்னர்கள் எதற்கெல்லாம் வரி
வசூளித்தார்கள்..??
14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
"...............ஸ்ரீ வி செஷ வமாராய உடையார் கு
மாரர் விசையபுக்கர் ஸ்ரீஉடையார் ஷதிவிராஜ ய பண்ணி அருளாநி
ன்ற ஷகாஸ .............நின் மேற்சொல்லா நின்ற
விஷ யி வருஷத்து ..........நாயற்று......வ....வஷத்து...பஞ்சமி
...பெற்ற னாள் பைய்யூர் பற்றுப் பெண்னை நாயிநார் ஈசனாற்கு
விளக்கு
உடையார் திருநாமத்தாலே சிறுகாலைச் சந்தி அம்முதும்
திருவிளக்கும் புதுப்பற்று
..ம்ப முட்டலும் சுங்கமு உள்ளாயங்க...தெப்போர்பட்டதும் எள்
ஆயம் எருதாயம்
...மதுவை குதிரை வண்டிப் பட்டை... திறைசேரிப் பறை.......
மற்றும் எப்பேற்பட்டதும்........."
கல்வெட்டு விளக்கம்
விஜய நகர மன்னர் புக்ராயர் என்பவர் இந்த பெண்ணேஸ்வர நாயனாருக்கு திருவிளக்கிடவும், சிறுகாலை, சந்தி ,பொழுதுகளில் அமுது செய்யவும் அளித்த நிலக்கொடைகளைக்
குறிப்பிடுகிறது.
மேலும் சில வரி வருவாய்களை குறிப்பிடுகிறது.
எள்ளுக்கு வரி
எருதுக்கு வரி
குதிரை வண்டியனுடைய பட்டைக்கு வரி
பையூர் என்ற நாட்டுப்பிரிவை குறிப்பிடப்பட்டுள்ளது
புதுப்பற்று என்பதும் நாட்டுப்பிரிவை குறிப்பிடுகிறது
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்
-அறம் கிருஷ்ணன்.





Wednesday, 28 October 2015

சோழர்களின் புலி சின்னம்


சோழர்களின் புலி சின்னம்
வாணகோ அரையரின் மகளும்
மூன்றாம் இராசராச சோழனுடைய (1216-1256)
பட்டத்தரசியும்மான சோழனை முழுதுடையாள்
கூத்தாடும் தேவர் நாச்சியார் என்பவரின் பெயருக்கு முன்னால் இந்த புலி சின்னம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் கோயிலின் கருவறையின் வடக்கு புறம் நான்முகனின் கீழ் குமுதப்பட்டையில் உள்ளது.
தமிழ் நாட்டில் வேறு எங்கேனும் சோழர்களின் புலி இலாஞ்சனை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ வாணகோவரையர் மகளார் கூத்தாடுந்தேவர் னாச்சியார்
சோழனை முழுதுமுடை
யார் பெண்னை நாயனாற்கு திரிநுந்தா விளக்குக்கு குடுத்த
பசு பத்து ரிஷப க..."
கல்வெட்டு விளக்கம்
கல்வெட்டின் துவக்கத்தில் சோழர்களின் புலி சின்னம்
பொறிக்கப்பட்டுள்ளன .வாணகோவரையரின் மகளும்
சோழனை முழுதும் உடையவருமான கூத்தாடுந் தேவர் நாச்சியார் பெண்னை நாயனாற்கு ஓரு நுந்தா விளக்குக்கு
எரிக்க பத்து பசுவும், ஓரு எருதும் தானமாக கொடுத்துள்ளார்.
இக்கோயிலில் மூன்றாம் இராசராச சோழனுடைய(1216-1256)
கல்வெட்டுகளும்
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகளும் நிறைய காணப்படுகின்றன.
ஆதலால் இது மூன்றாம் இராசராசனின் பட்டத்தரசியாகதான் இருக்க முடியும். அதுவும் சோழனை முழுதுடையாள் என்ற வாசகம் வருவதால் கண்டிப்பாக இராசராசனின் பட்டத்தரசிதான்.
-அறம் கிருஷ்ணன்


Tuesday, 27 October 2015

விஜய நகரர் மெய்க்கீர்த்தி -கி.பி.13 ஆம் நூற்றாண்டு


விஜய நகரர் மெய்க்கீர்த்தி
ஆண்டு-கி.பி.13 ஆம் நூற்றாண்டு
மன்னன்- வீரகம்பண உடையார்.
பெண்ணேஸ்வர மடம்
ஈஸ்வரன் கோயிலி கருவரையின் மேற்புறம் லிங்கோத்பவர்க்கு
அடியில் அதிட்டானத்தில் இந்த கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு செய்தி
.."ஸ்ரீ ஹரிஇராய விபாட பாஷக்கு தப்புவ இராய கண்டமு
இராயர் கண்டன்
ஸ்ரீ வீரகம்பண உடையவர் இராச்சியம் பண்ணுகிற நந்தன
வருஷத்து ஆனி மாதம் இருபத்தேழாந் தியதி ஸ்ரீஒலுவராய ச
கதாபி ஒல இராயர் வசுவ சங்கரன் மூன்று இராயர் ..நாராயண
சங்கம மன்னய கலை
யைக் காத்தவர் ருகதிய பண்ணிருவர் கண்டன் ருத்து..ல் பதிண்
மூவர கண்டன் பெண்
டிலு கொடுக்கு மல்லையன் தலைகொட கண்டன் கடக்குசூறை
க்கான நாரியப்ப செட்டி மகனிராமணன் மறைபுக்க காவலன்
உடையார்
பெண்னை நாயனாற்கு அமுதுபடிக்கு வாகூரில் பெரிய ஏரியில்
நடுவில் மதகிலே
சி ..ஐங்கண்டக விதை கழனி விட்டேன் இது யிலங்கனம்
சொன்னவர்
கெங்கை கரையில் குரால்பசுவை கொண்ற பாபம் கொள்ளுவார்கள்..."
கல்வெட்டு விளக்கம்.
இந்த கல்வெட்டு தொடக்கத்தில் வருவது விஜய நகர மன்னர்களின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது
நாரியப்ப செட்டியின் மகன் இராமணன் மறைபுக்க காவலன்
என்பவன் பெண்னை நாயனாற்கு அமுதுபடிக்கு வாகூரில் பெரிய ஏரியில் நிலம் கொடுத்ததை குறிப்பிடுகிறது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
-அறம் கிருஷ்ணன்.





Monday, 26 October 2015

பெண்ணேஸ்வர மடம் மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகள்



பெண்ணேஸ்வர மடம்
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகளும்
மூன்றாம் இராசராச சோழனுடைய(1216-1256)
கல்வெட்டுகளும்
இங்கே நிறைய இருக்கின்றன.

11-ஆம் நூற்றாண்டு தொடங்கி
15-ஆம்நூற்றாண்டு வரை
சோழர்கள், நுளம்பர்கள், விஜயநகர
மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
கோயில் கருவறையின் தென்புறம் குமுதத்தில் பிள்ளையார் சிலைக்கு கீழ் உள்ள கல்வெட்டு.
இந்த கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய
ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகும்

கல்வெட்டு செய்தி

."ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தியள் ஸ்ரீ குலோத்துங்க சோழ
தேவ ற் கு யாண்டு இருபத்தெட்டாவதில் அதியநூர் வேளாநான
ஆட்கொண்டார் மகந் ணீறஞ்சாநேன் ஆளுடையார் பெண்னை
யாண்டாருக்கு எண்ணுற்றுப் பலத்தாற் திருக்குத்துவிளக்குத்
திருச்சானைக்கல்லு மிட்டேந் இவை யிரண்டும் நீறணிஞ்சாந் தந்மம் திருநுன்தா விளக்குச் சந்திராதித்தவரை எரிப்பதாக இதுக்கு
வேண்டு மாடு முப்பதுருவும் இஷபமும் பெண்னையாண்டாருக்கு விட்டேந் நீறணிஞ்சாநேன்
ஓர் நாற்கண்ட க மும் விட்டேன் மதுராந்தக வீரநுளம்பன்நேன்"

கல்வெட்டு விளக்கம்.

மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய ஆட்சியின் போது அதியநூர் வேளாநான ஆட்கொண்டார் மகன் நீறணிஞ்சான்
என்பவன் பெண்னை நாயனாரக்கு குத்துவிளக்கும் , திருச்சானைக்கல் ஆகியவற்றை வழங்கினான்.
குத்துவிளக்கின் எடை 800 பலம் என்று கூறப்பட்டுள்ளது
அதியநூர் என்பது தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிகைப்பாடியாக இருக்கலாம்.
தினமும் நெய்க்காக 30 பசுக்களும் ஓரு ரிஷபம் அளித்துள்ளான்
மேற்படி தானத்தை உறுதி செய்து கண்டகவிதை விளையக்கூடிய நிலத்தை மதுராந்தக வீர நுளம்பன்
வழங்கியுள்ளான் .இந்த கல்வெட்டுல் ஓரு குத்துவிளக்கு
பொறிக்கப்பட்டுள்ளது
.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
-அறம் கிருஷ்ணன்.





மீண்டும் அத்திமுகம் பத்தாம் நூற்றாண்டு ஆலயம்



மீண்டும் அத்திமுகம்
பத்தாம் நூற்றாண்டு ஆலயம்
தமிழ் நாட்டில் இரண்டு மூலவர்கள் கொண்ட மூண்றாவது ஆலயம்
முதலாமவர் காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர்
இரண்டாவது -அகிலாண்டவள்ளி சமேத அழகிய சோழிஸ்வரர்.
நேற்று பிரதோஷ வழிபாடு
இரண்டுமணி நேரம் எல்லோரும் சேர்ந்து திருவாசமும், தேவாரமும் பாடிணார்கள்.மிக இனிமையாக இருந்தது.
வாருங்கள்..
வனுங்குதல் பொருட்டு
வாழ்க்கை நீளும்







சோழர்கால துவாரபாலகர்கள்
கங்கர்கள், சோழர்கள், நுளம்பர்கள்,
விஜயநகர மன்னர்கள்.,
10 -ஆம் நூற்றாண்டு முதல் 
15 -ஆம் நூற்றாண்டு ஆண்ட
அரசர்களின் கள்வெட்டுகள் உள்ளன.
இடம்-அத்திமுகம்
இரண்டு மூலவர்கள் கொண்ட மூண்றாவது ஆலயம்
முதலாமவர் காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர்
இரண்டாவது -அகிலாண்டவள்ளி சமேத அழகிய சோழிஸ்வரர்.
அறம் கிருஷ்ணன்.







அத்திமுகம்
நேற்று பிரதோஷ வழிபாடு
பிள்ளைகள் வட்டமாக அமர்ந்து யோகா கற்றுகொள்கிறார்கள்
புதிய நிகழ்வாக இருந்தது.வாழ்த்துக்கள்.



















Friday, 23 October 2015

ஐயனின் 1029 வது ஐப்பசி சதயவிழா.



கடந்த வரும் இதே நாளில்
ஐயனின் 1029 வது ஐப்பசி சதயவிழா.
சந்தன பெட்டியில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் வைத்து அதை யானை மீது ஏற்றி ஊர்வலமாக எடுத்து வந்தார்கள்.
நாம் பேசுகிற இந்த தமிழும், நாம் சுவாசிக்கிற இந்த மூச்சு காற்றும் ஐயன் இராஜராஜன் கொடுத்த கொடை.
இந்த இரண்டு பக்தி இலக்கியமும் வெளிவறாமல் போயிருந்தால்
நாம் வேறு மொழிகளைதான் பேசியிருப்போம்.
ஐயனே நின் பாதம் பணிகிறோம்.வாழ்க சோழம்.
சந்திரன் சூரியன் உள்ளவரை மாமன்னர் இராஜராஜசோழனின்
பெயரும் புகழும் பேசப்படவேண்டும்.