Wednesday, 14 October 2015

நடசாலை நடராஜர் கோயிலின் வடக்கு புறம் அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு



நடசாலை நடராஜர் கோயிலின் வடக்கு புறம் அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு
கல்வெட்டு
"..ஸ்ரீ கீலஹ சம்மற்சரத்து பங்குனி மாதம் பூராதிராயர்
முதலிகளில் வில்வராயர் காமசுநாண்டை மகன் மாரா
ண்டை உடையார் நெடுன்தேவர் நாயநார்க்கு வச்ச சந்தி
விக்கு ஒன்று இக்கோஇலில்சிவஸமணன்
தேவபட்டன் கதியாண்டை கைக்கொண்ட பொந் ஒந்று
பொலிசைக்கு சந்திராதித்தவரை விளக்கெ ரிக்கக் கடவேன்"
கல்வெட்டு விளக்கம்
பூராதிராயர் அதிகாரிகளில் ஒருவரான விஸ்வராயரது மகன் மாராண்டை சந்தி விளக்குக்காக ஒரு பொன் கொடுத்ததையும்
அதை அக்கோயிலின் பட்டர் பெற்றுகொண்டு சந்தி விளக்கு எரிக்க பட்டதை குறிக்கிறது.
இடம்-நடசாலை நடராஜர் கோயில்
மன்னன் -பூராதிராயர்
ஆண்டு-கி.பி 15 ஆம் நூற்றாண்டு
-அறம் கிருஷ்ணன்





அர்த்தமண்டபம் தென்புறம் சுவரின் அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டு இது
கல்வெட்டு
"..ஸ்ரீ நெடுந்தேவர் நாயிநாற்கு
காரைகிழான் வைத்த சந்தி விளக்கு 
சந்திராதித்தவரை செல்வதாக இக்கொயிலில்
கை கொண்ட பொந் ஒன்று பொலிசை
க்குச் சில்வாக எரிக்க கடவர்."
கல்வெட்டு விளக்கம்
காரைகிழான் என்பவன் நெடுந்தேவர் நாயிநாற்கு ஒரு பொன்
கொடுத்து அதனால் வரும் வட்டியை கொண்டு
சந்திரன் சூரியன் உள்ளவரை ஒரு சந்தி விளக்கு எரிக்க வேண்டும் என்கிறது.
இடம்; நடசாலை
கிருஷ்ணகிரியிலிருந்து -16 கி.மீ. தூரம்
-அறம் கிருஷ்ணன்











No comments:

Post a Comment