Monday, 5 October 2015



பெண் நடுகல்.
ஓசூர்-தேர்பேட்டை
நடுகல் வ.எண்; 17
பச்சைகுளம் அருகில்
முதன் முறையாக ஒரு பெண்னுக்கு தனி நடுகல்
சுவர்கம் வகை நடுகல்
இந்த பகுதியை ஆண்ட வீர ராமநாதன் மனைவியாக , அரசியாக இருக்க வேண்டும்.
இறந்தவுடன் நேராக சொர்கத்தில் வரவேற்க படுவது போல் சிற்பங்கள் வரிசையாக உள்ளன.
சிவலிங்கம், நந்தி, தேவலோகபெண்கள்
மங்கலபொருள் சங்கு இவை மேல் அடுக்கில் உள்ளவை
பெண்தெய்வம் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளன, இடது கையில் கிளிபோல் ஒரு பறவை உள்ளது.
இரண்டு பெண்கள் சாமரம் வீசுகிறார்கள்.
மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
சங்கு சிற்பம் மிக சிறப்பானது.
எந்த நூற்றாண்டு நடுகல்? யாருடைய காலம்?
தொல்லியல் துறை இதை பதிவு செய்துள்ளனவா?
ஆய்வாளர்கள் பதிவிடுங்கள்.
இதை சுத்தம் செய்து தகவல் பலகை வைக்கப்போகிறோம்.
அறம் கிருஷ்ணன்,இராசு, ஜெகநாதன், பிரியன், காமராசு.
உடன் வந்த அனைவருக்கும் நன்றி.










No comments:

Post a Comment