Monday, 26 October 2015

பெண்ணேஸ்வர மடம் மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகள்



பெண்ணேஸ்வர மடம்
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகளும்
மூன்றாம் இராசராச சோழனுடைய(1216-1256)
கல்வெட்டுகளும்
இங்கே நிறைய இருக்கின்றன.

11-ஆம் நூற்றாண்டு தொடங்கி
15-ஆம்நூற்றாண்டு வரை
சோழர்கள், நுளம்பர்கள், விஜயநகர
மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
கோயில் கருவறையின் தென்புறம் குமுதத்தில் பிள்ளையார் சிலைக்கு கீழ் உள்ள கல்வெட்டு.
இந்த கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய
ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகும்

கல்வெட்டு செய்தி

."ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தியள் ஸ்ரீ குலோத்துங்க சோழ
தேவ ற் கு யாண்டு இருபத்தெட்டாவதில் அதியநூர் வேளாநான
ஆட்கொண்டார் மகந் ணீறஞ்சாநேன் ஆளுடையார் பெண்னை
யாண்டாருக்கு எண்ணுற்றுப் பலத்தாற் திருக்குத்துவிளக்குத்
திருச்சானைக்கல்லு மிட்டேந் இவை யிரண்டும் நீறணிஞ்சாந் தந்மம் திருநுன்தா விளக்குச் சந்திராதித்தவரை எரிப்பதாக இதுக்கு
வேண்டு மாடு முப்பதுருவும் இஷபமும் பெண்னையாண்டாருக்கு விட்டேந் நீறணிஞ்சாநேன்
ஓர் நாற்கண்ட க மும் விட்டேன் மதுராந்தக வீரநுளம்பன்நேன்"

கல்வெட்டு விளக்கம்.

மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய ஆட்சியின் போது அதியநூர் வேளாநான ஆட்கொண்டார் மகன் நீறணிஞ்சான்
என்பவன் பெண்னை நாயனாரக்கு குத்துவிளக்கும் , திருச்சானைக்கல் ஆகியவற்றை வழங்கினான்.
குத்துவிளக்கின் எடை 800 பலம் என்று கூறப்பட்டுள்ளது
அதியநூர் என்பது தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிகைப்பாடியாக இருக்கலாம்.
தினமும் நெய்க்காக 30 பசுக்களும் ஓரு ரிஷபம் அளித்துள்ளான்
மேற்படி தானத்தை உறுதி செய்து கண்டகவிதை விளையக்கூடிய நிலத்தை மதுராந்தக வீர நுளம்பன்
வழங்கியுள்ளான் .இந்த கல்வெட்டுல் ஓரு குத்துவிளக்கு
பொறிக்கப்பட்டுள்ளது
.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
-அறம் கிருஷ்ணன்.





No comments:

Post a Comment