Tuesday, 13 October 2015

நடசாலை இங்கு மிக உயரமான நடராஜர்சிலை




நடசாலை
இங்கு மிக உயரமான நடராஜர்சிலை உள்ளது
ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் உள்ளது
இங்குள்ள கல்வெட்டுகளில் நெடுசால் என்றும், நாயனாரை நெடுந்தேவர் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
நடசாலை கோயிலில் 16 கல்வெட்டுகள் உள்ளன.
12 ஆம் நூற்றாண்டு தொடங்கி சோழர்கள், போசளகள்,
நுளம்பர்கள், விஜயநகர மன்னர்கள் என பல அரச வம்சத்தினர்
ஆட்சி செய்ததற்காண கல்வெட்டு சான்றுகள் காணப்படுகின்றன.
கிருஷ்ணகிரியிலிருந்து -16 கி.மீ. தூரம்
-அறம் கிருஷ்ணன்





அர்த்தமண்டபம் தென்புறம் சுவரின் அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டு இது
கல்வெட்டு
"..ஸ்ரீ நெடுந்தேவர் நாயிநாற்கு
காரைகிழான் வைத்த சந்தி விளக்கு 
சந்திராதித்தவரை செல்வதாக இக்கொயிலில்
கை கொண்ட பொந் ஒன்று பொலிசை
க்குச் சில்வாக எரிக்க கடவர்."
கல்வெட்டு விளக்கம்
காரைகிழான் என்பவன் நெடுந்தேவர் நாயிநாற்கு ஒரு பொன்
கொடுத்து அதனால் வரும் வட்டியை கொண்டு
சந்திரன் சூரியன் உள்ளவரை ஒரு சந்தி விளக்கு எரிக்க வேண்டும் என்கிறது.
இடம்; நடசாலை
கிருஷ்ணகிரியிலிருந்து -16 கி.மீ. தூரம்
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment