தேவர் குந்தானி.
அழிவின் விளிம்பில் நிற்கும் வரலாற்று தடயங்களை தேடி..
முதற் பயணம் தேவர் குந்தானி.
சின்னகொத்தூர்க்கு அருகில் உள்ளது.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கற்கோயில்
போசள அரசன் வீர ராமதானின் தலைநகரமாக நெடுங்காலம் இருந்தது.
சோழர்கள், ஹாய்சளர்கள், விஜநகரமன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.
அடையாளம் இல்லாமல் அழிவின் விளிம்பில் ..
பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
தொல்லியல் துறை இதை குஞ்சம்மாகோயில் என்று பதிவு செய்துள்ளார்கள். சின்னகொத்தூர் மக்களை கேட்டால் யாருக்குமே தெரியவில்லை.கடைசியில் குந்திகோயில் என்று அடையாளம் காட்டினார்கள். தற்போது குந்திஸ்வரர் என்ற பெயரில் வணங்குகிறார்கள்.
ஆனால் கல்வெட்டில் 'திரு வேகம்பமுடைய நாயனார் என்றும்,
ஸ்ரீ கயிலாஸமுடைய நயினார் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் குலோந்தங்க சோழன் காலத்திலும்,
மூன்றாம் குலோந்தங்க சோழன் காலத்திலும், மிக சிறப்பானமுறையில் வழிப்பாட்டில் இக்கோயில் இருந்துள்ளது.
மூன்றாம் குலோந்தங்க சோழன் போசளர் இளவரசியை மணந்துகொண்டதின் காரணமாக, போசளர்களின் செல்வாக்கு தமிழகம் முழுவதும் பரவியது.
கட்டிடகலையின் உச்சத்திலிருக்கும் இக்கற்கோயிலை
இப்படி சிதிலமடைந்து வேடிக்கை பார்ப்பதுதான் மிகப்பெரிய வேதனை.
இவ்வளவு முக்கிமான இந்த வரலாற்று சின்னத்தை
மீட்டு எடுக்கும் முயற்சியை கூட நமது தொல்லியல் துறை தொடங்காமல் இருப்பதற்கு யார் காரணம்?
இந்த கோயிலுக்காக கொடுக்கப்பட்ட கொடைகளும், நிலதானங்களும் ..எங்கே?
-அறம்கிருஷ்ணன்.
Dear sir, kindly give the location details
ReplyDelete