Tuesday, 31 May 2016

சென்னை தீவுத்திடலில் நாளை(01.06.16) துவங்கும் புத்தகக் கண்காட்சியில்

சென்னை தீவுத்திடலில் நாளை(01.06.16)
துவங்கும் புத்தகக் கண்காட்சியில்
எனது "இராசேந்திர சோழன் அரிய தகவல்கள்-1001"
என்ற புத்தகம் கீழ் கண்ட அரங்குகளில் கிடைக்கும்
புது உலகம் அரங்கு எண்-114 தொடர்பு எண்-8489401887
டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண்- 104,105-160,161
தொடர்பு எண்-9940446650
நியூ லேண்ட்ஸ் அரங்கு எண்-378,379
தொடர்பு எண்-9845056927
அகநி அரங்கு எண்-624 தொடர்பு எண்-9444360421
கோவை விஜயா பதிப்பகம்-422 2216614
சென்னை வீ கேன் புக்ஸ்-9940448599
சென்னை கலப்பை பதிப்பகம்-9444838389
ARCH BOOKS HOUSE -9865087185
மதுரை நற்றினைபதிப்பகம்-9750972043
உடுமலைபேட்டை சிதம்பரம்-7373737740
ஓசூர் இண்டியன் புக்ஸ்-9488762718
இராசேந்திரன் எனும் மந்திர சொல்
ஜம்பது வயதில் மன்னராக மகுடம் சூடி அறுபது வயதுக்கு மேல் கங்கை மீதும் கடாரம் மீதும் படையெடுத்து தெற்காசியா முழுவதும் வென்று உலகில் யாராலும் வெல்ல முடியாத வீரனாய் வலம் வந்தவன் 82-வது வயதில் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள பிரம்மதேசம் என்ற ஊரிலே இறந்து போனான் இராசேந்திரன். இதை மட்டும் சொன்னால் இவன் வரலாறு முடிந்துவிடுமா?
மேலும் படியுங்கள்....
-அறம் கிருஷ்ணன்-9578468122/9487568122


என் வாழ்க்கையை மாற்றிப்போட்ட வரலாற்று நிகழ்வு

என் வாழ்க்கையை மாற்றிப்போட்ட
வரலாற்று நிகழ்வு இது.
திரு.கோமகன்
எழுத்து சித்தர் திரு.பாலகுமாரன்.
இவர்கள் இருவரும்தான்
என்னை செதுக்கிய பிரம்மாக்கள்
இந்த நாளில் இவர்களை பற்றி சொல்வதில் பெருமையாக நினைக்கிறேன்.
ஒருவர் என்னை அழைத்துகொண்டு போய் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டில் இரக்கிவிட்டவர்.மற்றோருவர் அதே மாளிகை மேட்டில், இராசேந்திர சோழனின் அரண்மணையில் வைத்து ஆசீர்வதித்தவர்.
இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை
இராசேந்திர சோழன் யார் எனக்கு தெரியாது.ஆனால் கடந்த இரண்டு வருடமாக இராசேந்திர சோழனை தவிர வேறு யாரும் எனக்கு தெரியாது.
அப்படி ஒரு சந்திப்பு நிகழாமல் போயிருந்தால் ஒரு வம்சத்தின் வரலாறு தெரியாமலேயே வாழ்க்கை நகர்ந்திருக்கும்.
இந்த சந்திப்பு நடந்து ஒருவருடத்திற்குள்ளாகவே இராசேந்திர சோழனைப்பற்றி"இராசேந்திர சோழன் அரிய தகவல்கள் -1001" என்ற புத்தகத்தை தொகுத்து வெளியிடும் வாய்ப்பு பெற்றேன்.இவற்றை எல்லாம் பார்க்கும் போது இராசேந்திர சோழன் எனும் பெயர் வெறும்பெயரில்லை அது ஒரு மந்திர சொல்.
இராசேந்திரன் எனும்மந்திர சொல்லை உச்சரிக்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
இது அனைவருக்குமே நிகழும்.
இப்படி இரண்டாவது முறையாக நிகழ்ந்ததுதான் திருச்சியில் நடைப்பெற்ற இணைய முனையோர் சந்திப்பு.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
-அறம் கிருஷ்ணன்










Monday, 30 May 2016

திருச்சியில் இராசேந்திர சோழன் விழா

திருச்சியில் இராசேந்திர சோழன் விழா
கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் ஏற்பாடு செய்திருந்த இராசேந்திர சோழன் வரலாறு இணையம் முனைவோர் சந்திப்பு நிகழ்வு திருச்சியி நேற்று (29.05.16) சிறப்பாக நடந்து முடிந்தது.
விழாவில் திரு.கோமகன் அவர்கள் நோக்க உரையாற்றினார்.யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்பஅதிர்ச்சியாக எழுத்து சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது இல்லாமல் நிறைய கேள்விகளையும் அசத்தினார்.
காலை அமர்வில் திரு.இல.தியாகராஜன் அவர்களும், மாலை அமர்வில் திருமதி. பத்மாவதி அவர்களும், சிறப்புரையாற்றி , விழாவில் கலந்து கொண்டவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில்அளித்து இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மிக சிறப்பாகவும், பயனளிக்கும் வகையில் இருந்தன.விழாவில் கலந்து கொண்டவர்களும்,
விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிதுகொள்கிறேன்.
-அறம் கிருஷ்ணன்











Friday, 27 May 2016

இராசேந்திர சோழனின் படையில் ஒன்பது லட்சம் படை வீரர்கள்

இராசேந்திர சோழனின் படையில் ஒன்பது லட்சம் படை வீரர்கள் இருந்தார்கள் என்பதை கர்நாடாகாவில் தார்வார் என்னும் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
-அறம் கிருஷ்ணன்

இராசேந்திர சோழனை பற்றி இணைய கருத்தரங்கம் திருச்சியில்

இராசேந்திர சோழனை பற்றி இணைய கருத்தரங்கம்
திருச்சியில் நாளை (29.05.16)நடைப்பெறயிருக்கிறது
வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள் ஒன்றினையும் இணையம் முணையோர் சந்திப்புக்கு வாய்புள்ள அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கவும்
கடந்த காலங்களில் இராசேந்திர சோழனுக்கு தபால் துறை வழங்கிய மரியாதைதான் இந்த புகைப்படங்கள்.
-அறம் கிருஷ்ணன்







Thursday, 26 May 2016

இராசேந்திர சோழனின் அனுக்கி

இராசேந்திர சோழனின் அனுக்கி
இராஜராஜ சோழனுக்கு ஒரு பஞ்சவண் மாதேவி என்றால் இராசேந்திர சோழனுக்கு நங்கை பரவை யாகும்.திருவாரூர் வீதிகளில் இருவரும் தேரில் ஏறி வளம் வந்திருக்கிறார்கள்.
இராசேந்திர சோழனும் நங்கை பரவையும் இனைந்துநிற்கும் கற்சிலை திருவாரூர் கோயிலில் இருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்

Tuesday, 24 May 2016

இராசேந்திர சோழனின் செப்பேடுகளில் அதற்கான வாசகங்களை பொறித்தவர்களின் பெயர்கள்.

இராசேந்திர சோழனின் செப்பேடுகளில் அதற்கான வாசகங்களை பொறித்தவர்களின் பெயர்கள்.
அந்த பெயர்களில் எனது பெயரும் பதிவாகியிருப்பதில் பெருமகிழ்ச்சி.
அறம் கிருஷ்ணன்


இராசேந்திர சோழன் ஆட்சி காலத்தில்

இராசேந்திர சோழன் ஆட்சி காலத்தில் 
அரண்மணையில் சமயல் செய்யும் பணிபெண்களுக்கு 
"பெண்டாட்டி" என்று பெயர்.
இராசேந்திர சோழனுக்கு சமயல் செய்து கொடுத்த
பணிபெண்ணின் பெயர் " திருவமுதிரும் பெண்டாட்டி"
என்று பெயர்.
ஆனால் இப்போது பெண்டாட்டி என்பது மனைவி என்றே
அர்த்தப்படுகிறது.
-அறம் கிருஷ்ணன்

Monday, 23 May 2016

தமிழ் மொழியின் வளர்ச்சியில் சோழர்களின் பங்காக இராசேந்திர சோழனும், இராஜராஜ சோழனும் .

தமிழ் மொழியின் வளர்ச்சியில் சோழர்களின் பங்காக இராசேந்திர சோழனும், இராஜராஜ சோழனும் சேர்ந்து
தமிழை எவ்வாறு உயர்த்தி பிடித்தார்கள் என்பதை குறுகிய நேரத்தில் பேசுவதற்காண வாய்ப்பை இந்திய பேனாநண்பர் பேரவை ஏற்படுத்தி கொடுத்தது.
கடந்த சனிக்கிழமை 21.05.16 அன்று ஓசூரில் நடைப்பெற்ற 
இந்திய பேனாநண்பர் பேரவையின் 21 ஆவது ஆண்டு விழாவும், மலர் வெளியிடும். பாவலர் கருமழை தமிழாழன் அவர்களின் " செப்பேடுகள்" கவிதை நூல் வெளியிட்டு விழாவு மிகசிறப்பாக நடைப்பெறது.
இந்த விழாவில்தான் சோழர்களை பற்றி பேசுவதற்காண வாய்ப்பு கிடைத்தது.இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் ஓசூர் அறம் இலக்கிய அமைப்பு சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிது கொள்கிறேன்
-அறம் கிருஷ்ணன்