Monday, 30 May 2016

திருச்சியில் இராசேந்திர சோழன் விழா

திருச்சியில் இராசேந்திர சோழன் விழா
கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் ஏற்பாடு செய்திருந்த இராசேந்திர சோழன் வரலாறு இணையம் முனைவோர் சந்திப்பு நிகழ்வு திருச்சியி நேற்று (29.05.16) சிறப்பாக நடந்து முடிந்தது.
விழாவில் திரு.கோமகன் அவர்கள் நோக்க உரையாற்றினார்.யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்பஅதிர்ச்சியாக எழுத்து சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது இல்லாமல் நிறைய கேள்விகளையும் அசத்தினார்.
காலை அமர்வில் திரு.இல.தியாகராஜன் அவர்களும், மாலை அமர்வில் திருமதி. பத்மாவதி அவர்களும், சிறப்புரையாற்றி , விழாவில் கலந்து கொண்டவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில்அளித்து இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மிக சிறப்பாகவும், பயனளிக்கும் வகையில் இருந்தன.விழாவில் கலந்து கொண்டவர்களும்,
விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிதுகொள்கிறேன்.
-அறம் கிருஷ்ணன்











No comments:

Post a Comment