Tuesday, 31 May 2016

என் வாழ்க்கையை மாற்றிப்போட்ட வரலாற்று நிகழ்வு

என் வாழ்க்கையை மாற்றிப்போட்ட
வரலாற்று நிகழ்வு இது.
திரு.கோமகன்
எழுத்து சித்தர் திரு.பாலகுமாரன்.
இவர்கள் இருவரும்தான்
என்னை செதுக்கிய பிரம்மாக்கள்
இந்த நாளில் இவர்களை பற்றி சொல்வதில் பெருமையாக நினைக்கிறேன்.
ஒருவர் என்னை அழைத்துகொண்டு போய் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டில் இரக்கிவிட்டவர்.மற்றோருவர் அதே மாளிகை மேட்டில், இராசேந்திர சோழனின் அரண்மணையில் வைத்து ஆசீர்வதித்தவர்.
இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை
இராசேந்திர சோழன் யார் எனக்கு தெரியாது.ஆனால் கடந்த இரண்டு வருடமாக இராசேந்திர சோழனை தவிர வேறு யாரும் எனக்கு தெரியாது.
அப்படி ஒரு சந்திப்பு நிகழாமல் போயிருந்தால் ஒரு வம்சத்தின் வரலாறு தெரியாமலேயே வாழ்க்கை நகர்ந்திருக்கும்.
இந்த சந்திப்பு நடந்து ஒருவருடத்திற்குள்ளாகவே இராசேந்திர சோழனைப்பற்றி"இராசேந்திர சோழன் அரிய தகவல்கள் -1001" என்ற புத்தகத்தை தொகுத்து வெளியிடும் வாய்ப்பு பெற்றேன்.இவற்றை எல்லாம் பார்க்கும் போது இராசேந்திர சோழன் எனும் பெயர் வெறும்பெயரில்லை அது ஒரு மந்திர சொல்.
இராசேந்திரன் எனும்மந்திர சொல்லை உச்சரிக்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
இது அனைவருக்குமே நிகழும்.
இப்படி இரண்டாவது முறையாக நிகழ்ந்ததுதான் திருச்சியில் நடைப்பெற்ற இணைய முனையோர் சந்திப்பு.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
-அறம் கிருஷ்ணன்










No comments:

Post a Comment