Wednesday, 11 May 2016

நடுகற்களின் தொகுப்பு ஒரே இடத்தில் ஓசூர் வட்டம் கெலமங்கலம்

நடுகற்களின் தொகுப்பு ஒரே இடத்தில்
ஓசூர் வட்டம் கெலமங்கலம் அரசு மகளீர் மேல் நிலைபள்ளிக்கு பின் புரத்தில் கி,பி. 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலவகையான 23 நடுகற்களின் தொகுப்பு ஒரே இடத்தில் இருக்கின்றன.
பல தலைமுறையாக குரும்பர் இன மக்கள் இந்த இடத்தில் வழிபாடு செய்து வருவதா அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தார்கள்.
ஒன்று மட்டுமே புலி குத்தப்பட்டான் வகை நடுகல்.
மற்றவை எல்லாமே சதிக்கல் வகையை சார்ந்த நடுகற்கல்கள்தான்.
ஒரு ஆண் ஒரு பெண் என்று பதிமூன்று நடுகற்களும்
ஒரு ஆண் இரண்டு பெண்கள் என்று ஆறு நடுகற்களும்
இரண்டு பெண்கள் நடனம் அடுவது போல நடுகற்களும்
தலைவன், தலைவி, மகன், மகள் என்று ஒரு குடும்ப நடுகற்களும், ஒரு ஆண் ஒரு பெண் இனைந்து வணங்குவது போன்ற நடுகள்ளும், இப்படி பலவகையான
நடுகற்களும் இருக்கின்றன.
ஆண்கள் எல்லோரும் வாளை மேலே உயர்த்தி பிடித்த படியும், பெண்கள் எல்லோர் கைகளிளும் மதுகுடுவை இருக்கின்றன.
இங்கே இரண்டு கல்வெட்டுகள் இருக்கின்றன.அதுபடிக்கபடும் போது மேலும் விவரங்கள்கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
என்னோடு பயணப்பட்ட ஜெகநாதன், பிரியன், மஞ்சுநாத், அனைவருக்கும் நன்றி.
-அறம் கிருஷ்ணன்











1 comment: