Friday, 6 May 2016

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் நூற்றாண்டு வரையிலும் புத்த மதம் இருந்ததற்கான அடையாளங்கள்

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் நூற்றாண்டு வரையிலும் புத்த மதம் இருந்ததற்கான அடையாளங்கள் இவை.
இந்த சிற்பங்கள் இரண்டும் கடகத்தூர் என்ற ஊரிலிருந்து எடுத்துவரப்பட்டு இப்போது தருமபுரி அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அமர்ந்த நிலையில் தியான நிலையில் உள்ள புத்தர் சிற்பம் மிகப்பெரியதாக உள்ளது.இது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாகும்.கழுத்து உடைக்கப்பட்டிருக்கிறது.எந்த நூற்றாண்டில் உடைக்கப்பட்டது என்ற விபரம் இதுவரை கிடைக்கவில்லை.
மற்றோறு சிற்பம் நின்ற நிலையில் வலதுகையில் அபயமுத்திரையுடனும் இடது கை உடைந்த நிலையிலும் இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் கடகத்தூரை தவிர வேறு இடங்களில் புத்தமதம் வளராமல் போனதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்.
இம் மாவட்டத்தில் சமணமும் பௌத்தமும் பத்தாம் நூற்றாண்டு வரை ஒருகுறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதுவும் மிகசிறிய அளவே வளர்ந்துள்ளது.
சமண படுக்கைகள் தருமபுரி மற்று கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டுபிடிக்க பட்டுள்ளனவா?
சமணம், பௌத்தம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு, அல்லது இரண்டையும் எப்படி வேறுபடுத்தி புரிந்து கொள்வது.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment